பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. கழார்க் கீரன்எயிற்றியார்

கழார் என்பது, காவிரி கடலோடு கலக்குமிடத்தில் இருக்கும் ஒரு சிற்றார்; காவிரிப்பூம்பட்டினத்திற்கு நான்கு அல்லது ஐந்துகல் தூரத்தில் இருப்பது ; அவ் ஆருக்கு அருகே, காவிரியில் அமைந்த படித்துறை, பலரும் படிந்து ஆடும் பெருமை வாய்ந்தது ; சோழராட்சிக்கு அடங்கிய மத்தி என்போனுக்கு உரியது. அவ்வூரில் கீரன் என்பார் ஒருவர் இருந்தனர். கீரன் என்ற பெயர், ஒரு வகைப் பார்ப்பாருக்கு உரிய குலப்பெயர் என்றும், சங்கை வாள்கொண்டு அறுத்துக் கைவளை முதலியன செய் தல் அக் குலத் தொழிலாம் என்றும் கூறுவர் ; பொற் கொல்லர், இரும்புக் கொல்லர், மரத்தச்சர் ஆகியோராகிய கம்மியரையே கீரர் என்ற சொல் குறிக்கும் என்று கொள் வோரும் உளர் அஃது எவ்வாருயிலும், அக்குடி, நக்கீரர் போன்ற நல்லிசைப்புலமை சான்ற நல்லாசிரியர் பலர் பிறந்த பெருமையுடையது என்பதில் ஐயமில்லை. அத் தகைய பெருமைமிக்க குடியிலே பிறந்தவர் கீரர். ஆகவே, வழிவழியாகத் தமிழ் வ்ளர்த்த மாபோடு தொடர்புடைய வர் நம் எயிற்றியார் என்பது அவருக்குப் பெருமை பளிப் பதே. எயினி என்பதைப்போலவே, எயிற்றி என்பதும் குறிஞ்சிகில்ப் பெண்மக்கள் பெயராம்; ஆகவே, இவர் குறவர் குடியிலே பிறந்தவர் என்பது உறுதி ; குறவர் குடியிலே பிறந்த இவர், கீரன் என்ற வேறு குடியிற் பிறர் தவரை மணந்து, மணவினைக்குத் தடை செய்யும் வகையில் குடிப்பிரிவினையைக் கொள்ளவில்லை தமிழர் என்ற கொள் கைக்குச் சான்ருயினர் என்று கொள்ளுதல் நன்று.

எயிற்றியார் கழார்த்துறையில் வாழ்ந்தவர் ஆகவே, அவ்வூர், அவ்ஆரார், அவ்வூரையடுத்து வாழும் பிற உயிர் இவற்றின் இயல்புகளே நன்குணர்ந்துள்ளார் ; ஒரு பாட் டில், அவ்வூர் மக்கள் நாள்தோறும் தாம் உண்ணும் முன் னர்க், காக்கைக்குச் சோறுபோடும் இயல்பினர் என்பதை யும், அதை நாள்தோறும் உண்டு பழகிய காக்கைகள், காற்றும் மழையும் கலந்தடிக்கும் காலத்திலும் அச் சோற்