பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கைபாடினியார் நச்செள்ளையார் 27.

விட்டான் ; கள்ளாத வயதில் தனக்குத் துணையாய் இருப் பான்” என்று மகிழ்வதற்கு மாருக, பிழைத்தோடி வந்து விட்டானே! பிறந்த குடிக்குப் பழிகொண்டு வந்துவிட் டானே !’ என்று ப்தைப்தைப்பதும், அவன் அக் களக்கே இறந்தான் என்பதை யறிந்து அகம் மகிழ்வதும் ஆகிய, அக்காலத் தமிழ்மகளிரின் வீர உணர்ச்சியை விளங்க உரைத்துள்ளார் காக்கைபாடினியார் நச்செள்

ளையார்.

' காம்பெழுத் துலறிய நிாம்பா மென்ருேள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழித்து மாறினன் என்று பலர் கூற

மண்டமர்க்கு உடைந்தன ளுயின், உண்டவென் முலையறுத் திடுவென் யான் எனச் சினை இக் கொண்ட வாளொடு படுபிணம் பெயமாக் செங்களம் தழவுவோள் சிதைந்து வேருகிய படுமகன் கிடக்கை காணுஉ - ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே. (புறம்:உன.)

இப் பாட்டைப் பாடித் தமிழர் உள்ளத்தில் அழியா இடம் பெற்ற இவ் வம்மையாரின் இயற்பெயர் செள்ளே என்பதாம் ; செள்ளை என்ற இப்பெயர், பண்டைக் காலத் தில், தமிழ்ப் பெண்களுக்கு இட்டு வழங்கப்பட்டிருந்தது; சோர் மரபில் வந்த மகள் ஒருத்தி அந்துவஞ்செள்ளே என் அழைக்கப்படுகிருள்; செள்ளே என்ற இயற்பெயர்கொண்ட இவ் வம்மையார், புலமையாலும், பிறவற்றிலுைம் பெருமை யும் சிறப்பும் பெற்றிருந்தனர் ; ஆகவே, அவர் பெயர்க்கு முன்னே, பெருமையும் சிறப்பும் குறிக்கும் என்ற சிறப்பு அடையினேயும், பின்னே, ஆர்' என்ற உயர்வு குறிக்கும் பன்மை விகுதியையும் கொடுத்து நச்செள்ளே யார் என அழைக்கப் பெற்ருர் சச்செள்ளையார் என்ற அவர் பெயரைக் காக்கைபாடினியார் என்ற தொடர் மேலும் சிறப்பித்து கிற்கிறது. அச் சிறப்புத் தொடர், அவர் பாடிய பாட்டு ஒன்றைக் கண்டு, அப் பாட்டில் அவர் கூறியுள்ள கருத்தின் சிறப்பை உணர்ந்து பாராட்டிய பிற்