பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கைபாடினியார் நச்செள்ளையார் 29%

அவள் எண்ணியவாறே, அவனும் அன்றுமாலேயே வந்துசேர்ந்தான்; மனேவியைக் கண்டான் ; தன் பிரிவு தாழாது தளர்ந்திருப்பாள் என்று எண்ணினன்; ஆனால், அவள் தன் பிரிவுகுறித்துக் கவலைகொண்டதாகவோ, அதல்ை உடல்நலம் குன்றியதாகவோ அவள் உடல்கிலே உணர்த்தவில்லை; அதனல், அவள் தன் பிரிவுகுறித்துக் கவலை .ெ கா ஸ் ள வி ல் லை என்று எண்ணவில்லை அவன் ; மாருக, அவள் கவலைகொள்ளாது இருந்திாள் ; கவலையுற்றுக் கலங்கியே யிருப்பாள் ; அவள் கவலையைப் போக்கி ஆற்றியிருப்பாள் அவள் தோழி என்றே எண்ணி ன்ை ; தோழியைக் கண்டு அவள் செயலுக்கு நன்றி தெரிவித்தான் ; ஆனல், அந் நன்றியை ஏற்றுக்கொள்ள மறுத்தாள் அவள். தலைவ! நீ பிரிந்தமை கண்டு ஆற்ருது அழுத அவளுக்கு நான் எவ்வளவோ ஆறுதல் உரை கூறினேன் என்பது உண்மையே; ஆனல், அவள் அதைப் பொருட்படுத்தவில்லை; கவலேமிக்குக் கவினழிந்து வாடிக்கொண்டேதான் இருந்தாள்; ஆனால், காலையில் காக்கை ஒன்று கரைந்தது ; பிறகுதான் அவள் கவலை யொழிந்து கவினுற்ருள் ; ஆகவே உண்மையில் நன்றி செலுத்துவதாய் இருந்தால், அக் காக்கைக்குத்தான் நன்றி செலுத்தவேண்டும் நள்ளி என்ற வள்ள்லுக்கு உரிய காட்டிலே வாழும் இடையர்களின் பசுக்களிடத்தே பெற்ற நெய்யோடு திொண்டிாகரில் விளைந்த வெண்ணெல் அரிசி பாலான சோற்றைக் கலந்து ஏழுகலத்தில் வைத்துக் கொடுப்பினும், அக் காக்கை நினக்குச் செய்த உதவிக்கு. அது ஈடாகாது” என்று கூறினுள்.

&: திண்தேர் கள்ளி கானத்து அண்டர் பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து எந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவாக் கரைந்த காக்கையது பலியே.” . . . . (குறுங் : உகo.).