பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. காவற்பெண்டு

காவற்பெண்டு என்பது செவிலித்தாயைக் குறிக்க அக்காலத்தே வழங்கிய ஒரு பெயர். அதுவே இவர்க்கு இயற்பெயராக அமைந்துவிட்டது. சிறந்த அரசர்குடி ஒன்றில் இவர் செவிலித்தாயாகத் தொழிலாற்றியிருப்பர் என எண்ணுவர் சிலர். சோழன் போர்வைக் கோப்பெரு, நற்கிள்ளி என்ற சோழ அரசனுக்குச் செவிலித்தாயாக இவர் இருந்தார் என்றும் கூறுவர்; ஆனால், அதற்கான, சான்று எதையும் அவர்கள் காட்டவில்லை புறநானுாற் றில், இவர்பாட்டு, போசவைக் கோப்பெருகற்கிள்ளியைப் பாராட்டிவந்த பாக்களேயடுத்து வைக்கப்பெற்றுள்ளமையே இவரை, அவன் செவிலித்தாயாகக் கோடற்குக் காரணம் போலும்; முன்பாட்டு, இன்னுரைக் குறிக்கிறது ; ஆகவே, இதுவும், அவரையே குறித்ததாதல் வேண்டும் எனக் கோடல் பொருந்தாது. முன்னும், பின்னும் வரும் பாக்கள், ஒருவரையே குறிக்க, இடைவரும் பாட்டு, யாரைக்குறிப்ப தெனும் தெளிவின்றிவரின், ஒாேவழி அப் பாட்டையும், அவரைக் குறிப்பதாகவே கோடல் பொருந்தும் ; இவர் பாட்டு அவ்வாறு வரிசை செய்யப்பெறவில்லை ; இவர் பாட்டை அடுத்துவரும் பாட்டு, போாவைக்கோப்பெருகற். கிள்ளியைக் குறிக்கவில்லை; மாருக அதியமான் நெடுமா னஞ்சியைக் குறிக்கிறது. ஆகவே, இவரை அப் போாவைக் கோவின் செவிலித்தாயாகக் கோடல் பொருந்தாது எனக் கொள்க. சில ஏடுகளில் இவர் பெயர் காதற்பெண்டு. என்றும் காணப்படுவதை நாம் மறத்தல் கூடாது. இவர் பெயர் எதுவேயாயினும் இவர் தொழில் எதுவேயாயினும், இவர் பாட்டைப் படிப்போர் ஒவ்வொருவரும், இவர் ஒரு மறக்குடி மகளாய்ப் பிறந்து மற்ருெரு மறக்குடியில் வாழ்க் கைப்பட்டவர் என்பதும், மறம்விளங்கும் மகன் ஒருவ லுக்குத் தாயாம் பேறுபெற்றவர் என்பதும், சிறு சொற்க ளால் பெரும்பொருள்களை விளங்கவைக்கும் புலமையுடை யவா எனபதும உண்ாவா.