பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. . பெண்பாற் புலவர்கள்

அன்ருே அந்தக் கடமையில் தவறுதல் கூடாது; அதற்குப் பொருள் மிக மிகத் தேவை;

" அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும்

செல்வச் செவிலியால் உண்டு.” (திருக்குறள் : எடுள)

ஆகவே, அறத்திற்கும் பொருள்தேவை; அறத்திலும் பொருளே சிறப்புடைத்து,” என்று அறிந்தார் அவர் ; ஆகவே பிரித்தார் என்று அவளுக்கு உண்மை உணர்வு உண்டாயிற்று " பொருளின் அருமையே அருமை ’ என்று அவள் உள்ளம் அவளறியாமலே கூறிற்று.

  • பொதும்புகோ றல்கும் பூங்கண் இருங்குயில்

'கவறுபெயர்த் தன்ன கில்லா வாழ்க்கையிட்டு அகறல் ஒம்புமின் அறிவுடையீர்!’ எனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல, மெய்யுற இருந்து மேவர நுவல, இன்ன தாகிய காலப் பொருள்வயின் பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின் அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே.' (நற்றிணை: உசட

' என்னே விட்டுப் பிரிந்தானே என்று ஏங்கிச் சினவாது, பிரிதல் அவர்கடன் ; அதற்குத் துணை செய்தல் என்கடன் ; இல்லறப் பண்பிற்கு ஏற்றது ' எனத் தன் கடமையுணர்ந்து துயர் பொறுத்துக்கொள்ளும் தலைமகள் ஒருத்தியைக் காமக்கணிப் பசலையார், நமக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.