பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கோப்பெண்டு 67

என்று ஏக்கமுற்ருர் ; கணவனேப் பிரிந்து தனித்து வாழ் வது தன்னுல் இயலாது என்பதை உணர்ந்தார்; உடனே சுடுகாட்டில், கரிய கட்டைகளைக் கொண்டு பிணப் படுக்கை யொன்று அமைக்க ஏற்பாடு செய்தார். குளித்து நீர் ஒழுகும் மயிர் இருபக்கமும் தொங்கச் சுடுகாடுகோக்கி கடக்கத் தொடங்கினர். அவரை அக்கிலேயிற் கண்டார் மதுரைப் பேராலவாயர் என்ற பெரும் புலவர். ' முதி வோசை எப்போதும் முழங்கிக்கொண்டிருக்கிறதே ; காவலர் கண் இமையாது காத்திருக்கின்றனரே என்று கருதி அவள் கணவன் முன்னர் ஒருசமயம் அவளேச் சிறிது பொழுதுவிட்டுப் பிரிந்திருந்தான் ; அதற்கே அஞ்சினுள் இவள்; அவ்வளவு மென்மையும் இளமையும் உடைய இவளா இப்போது சுடுகாடு நோக்கிச் செல்கிருள் !’

'நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்

போளுர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரும் அம்ம ; தானே : தன் கொழுகன் முழவு கண்துயிலாக் கடியுடை வியன்சகர்ச் சிறுநணி தமிய ளாயினும் இன்னுயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே.”

(புறம் : உசஎ) என்று எண்ணினர்; இருகண் நீர்சோர அழுதார்; அழுது என்ன பயன்? பெருங்கோப்பெண்டு சுடுகாட்டை அடைந்து அவ் வீமத்திற்குத் தீவைத்தார். அவரோடு அதுவரையிலும் தொடர்ந்துவந்த சான்ருேர் பலரும், அவர் செய்கை யறி யாது திகைத்து கின்றனர். இறுதியாக, அவர்கள்பால் விடைபெற்றுத் தீயில் குதிக்கத் துணிந்தார்; அங்கிலையில் புலவர் அனேவரும் அவரைத் தடுத்து கிறுத்தினர்; கண வன் இறந்தமையால் அரசிழந்து அல்லல் உறும் அங் நாட்டை அவருக்கு நினைவூட்டினர் ; உடனுயிர் மாயாது உயிர் வாழ்தலும் உத்தம மாதர்க்கு உரியதே என உணர்த்தினர். - .

உடனே பெருங்கோப்பெண்டிர்க்கு வந்தது கோபம்.