பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 . . . பெண்பாற் புலவர்கள்

இவ்வாறு, கிள்ளிபால் கொண்டிருந்த தம் காதல் உள்ளத்தைக் கவிகள் வழியாகவே காட்டியுள்ளார் சக்கண் ணையார்; அவர் காதல் கைவரப்பெற்றதா ? அல்லது இறுதிவரை கைக்கிளையாகவே முடிந்ததா? என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. . என் காதல் கிறைவேறவில்லை; என் காதலை ஏற் அக்கொள்ளாத ஒருவன் நல்வாழ்வு வாழ்வதா? அதையும் நான் பார்ப்பதா கூடாது. என் காதலே மறுத்த அவனே வாழவிடேன்’ என்று எண்ணும் இழிகுல மகளிரைப் போல் அல்லாமல், அவன் எம் காதலன் , எம்மால் அன்பு செய்யப்பெற்றவன் ; எம் காதலை அவன் மதியாது போயிலும் கவலையில்லை; எமக்கு அவன்பால் காதல் உண்டு; ஆகவே, அவன் கல்வாழ்வு வாழவேண்டும் ; அவன் வாழ்வில் தாழ்வு ஏற்படல் கூடாது; அவன் தாழ்ந் தான் என்ற சொல்லேயும் ஏற்க மறுக்கும் எம் காதுகள் ” என்று எண்ணும் நக்கண்ணையார் உள்ளத் துய்மையின் உயர்வை உணருங்கள் !

புறத்தில் பாடிய தம் வாழ்வுப் பாடல்களே பல்லாமல், அகத்துறைப் பாடல்கள் மூன்றும் பாடியுள்ளார் நக்கண் னோர்; அவற்றுள் ஒர் இடத்தே அவர் மேற்கொண்ட உவமையொன்றே அவர் புலமையின் சிறப்பை உணர்த்தும். தலைமகள் ஒருத்தி, தலைமகன் ஒருவனுேடு கள வொழுக்க உறவுகொண்டு வாழ்கிருள் ; ஆனல், அவ் வாழ் விற்கு எத்தனையோ இடையூறுகள் உண்டாகின்றன. தலைவன்ட்ால் கொண்டுள்ள பேர்ன்பு, அத் தடைகளை யெல்லாம் அகற்றச் செய்கிறது; அதனுல், பெண்கள்பால் இயல்பாக நிறைந்து காணவேண்டிய பெண்மைக் குணங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறைந்துவிட்டன ; இறுதியாக அவள்பால் கிற்பது நாண் ஒன்றே; அதுவும் எப்போது அவளைவிட்டு நீங்கிவிடுமோ என்ற கிலே. இம் மாறுபாட் டைக் கண்டாள் அவள் தாய்; அந் நிலை ஏற்படாதிருக்க, மிகவும் விழிப்போடு கின்று தன் மகளைக் காக்கத் தொடங்கிவிட்டாள். இாவிலும் உறக்கத்தை மறந்து