பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெண்பாற் புலவர்கள்

முன்னுள் வீழ்ந்த உரவோர் மகனே, 'உன்னிலன்' என்னும் புண்ஒன்று அம்பு.’ -

(புறம்: டகC)

பொன்முடியார் பாடிய பாடல் பலவற்றினும் அவருக் குப் பேரும் புகழும் அளித்தது, ஈன்று புறம் கருதல் ” என்ற புறநானூற்றுப் பாடல் ஒன்றே; அப் பாட்டில் விடும் நாடும் வாழ வழி கூறியுள்ளார் ; வீடும் நாடும் அவற் றில் வாழ்வோரையே குறிக்கும் ; வீடு என்ற உடனே, பெற்ருேரும் பிள்ளைகளும் ஆகிய இவர்களே நம் கண்முன் தோன்றுவர் ; அவ்வாறே நாடு என்றவுடனே, நாட்டில் வாழும் மக்களும் அம் மக்கள் தலைவனும் அரசனும் கம் கண்முன் தோன்றுவர் ; ஆகவே, வீட்டிலும் காட்டிலும் வாழ்வோர் நல்லவராயின் வீடும் நாடும் விளங்கித் தோன் ஆறும்; வீட்டிலும் நாட்டிலும் வாழ்வோர் நல்லவராதல், அவர்கள் தங்கள் தங்கள் கடனறிந்து வாழ்தலே ஆகும். ஆகவே, வீட்டையும் காட்டையும் கன்னிலையில் காண விரும்புவோர், வீட்டிலும் நாட்டிலும் வாழ்வோர்க்கு அவர் கடன்களே அறிவித்து அதன்வழி நடக்கப் பழக்குதல் வேண்டும் ; அதைச் செய்துள்ளார் பொன்முடியார்.

வீடு பல கொண்டதே நாடு ஆகலின், வீட்டைமுதலில் நோக்குகிருர் வீட்டிலும், தாய் தந்தை மக்கள் என்போரில் தாயே முன்னவள் ; ஆகவே, தாயின் கடமையை முதற் கண் எடுத்துக்கூறுகிருர். ஒருவர்க்கு அறிவுகூறுவோர், முதலில் அதைத்தான் அறிந்து அதன்வழி நடப்பவராதல் வேண்டும்; ஒருவருக்கு அறிவுரை கூறுவதினும், அவ்வாறு நடத்துகாட்டுவதே நன்முறை ; இதை உணர்ந்தவர் பொன் முடியார். உலகத் தாய்மார்களுக்கெல்லாம் அவர் கட மையை உணர்த்த விரும்புகிருர் ; அத் தாய்மார்களுள் தானும் ஒரு தாய் ஆதலின், ! உங்கள் கடமை இது’ என்று கூறுவதிலும், “என் கடன் இது” என்று கூறினர்; காயாம் தன் தடன் யாது? ஈன்று புறந்தருதல். பெர்ன் முடியார் வாழ்ந்தகாலம், நாட்டில் புறப்பகையும், அகப்