பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பேயனர்

செய்யார் தேஎம் தெருமால் கலிப்பப் பவ்வ மீமிசைப் பகற்க கிர் பாப்பி, வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்குப் பிறந்துதவழ் கற்றதற் ருெட்டுச் சிறந்த நல் நாடு செகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப, ’

'இரும்பனம் போங்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிரும் சென்னி மேம்பட மிலேந்த இருபெரு வேந்தரும் ஒரு களத்த அவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் கண்னர் கண்ணிக் கரிகால் வளவன்.”

(பொருநர் கஉக; கசக. -அ.)

கரிகாலன் ஆட்சி நலத்தால், அந் நாட்டு, இளையரும், முதியருமாய மக்கள் கம்முள் முரண் ஒழிந்து, அன்புடை உளத்தராய் ஆடிப்பாடி அளவளாவி வாழ்வர்; அவருள் முதியாயினர் ஒசோவழி முரண்படுவாயினும், அம்முரண் பாடு, அரசன் அவை அடைந்து வழக்குரைக்கும் வரை கிற்றல் அரிதாம்; அவர் அவ் அவைக்கு முன்னரே, தம் முரண்பாடு ஒழித்து, முன்னேயினும் பெரு நட்பாளராவர்; அத்தகைய பெருந்தகை உடையார் அங்காட்டு மக்கள் எனக் கூறு முகத்தான்், அங்காடாளும் அாசன் செங் கோல் திறனைச் சிறக்கப் பாடியுள்ளார்:

'இளையோர் வண்டல் அயாவும், முதியோர்

அவை புகு பொழுதில் தம்பகை முரண் செலவும்.”

(பொருநர்: க.அஎ-அ)

இத்தொடரை அடிப்படையாகக்கொண்டு, திருமாவள வுன், வழக்கறிந்து திேவழங்கும் வன்மையை விளக்கும் ஒரு கதை கூறுவாரும் உளர். ஒருநாள் கரிகாலன், அரச வையில் அமர்ந்திருந்தான்்; அப்போது, தம்முட்பகை கொண்ட முதியோர் இருவர், அவன்பால் முறைவேண்டி வந்தனர்; வந்த அவர்கள், அரசவை அணுகி நோக்கியக் கால், கரிகாலன் கனி இளையணுய் இருப்பக் கண்டனர்;