பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பேயனர்

முறையினை எடுத்துக் கூறி ஏத்திப் போற்றியுள்ளார் ; கரிகாற் பெருவளத்தான்், தன்னைக் கண்டு பாராட்ட வரும் பரிசிலர்களைத் தன்ளுேடு முன்பே நட்புக்கொண்டு பழகிய வரை விரும்பி வரவேற்பதேபோல் வரவேற்பன் ; இாப் பாரைப் புரப்போர் எல்லாம் இவனே போலின், இரத் துண்ணும் வாழ்வே இனிமை யுடைத்தாம் எனும் எண்ணம் அவர் உளத்தே எழுமாறு இன்னுரை பல வழங் குவன்; வந்தாரைத் தன் அரசியல் அலுவல் மிகுதியால் காணுத இராது, அவர் எப்போதும் தன் காட்சிக்குட் பட்டாராகும் அத்துணை நெருங்கிய இடத்திலேயே அவரை இருக்திப் புரப்பன் ; அவன், அவர்களைக் கண்ணுல் பருகி விடுவான் போல் பரிந்து நோக்குவதால், வந்தவர் எலும்பும் கரைந்துகுமாறு உளங் குளிர்ந்து உறைவர். கரிகாலன்பால் காணலாம் இவ் விருக்கேற்கும் பண்பு, விருந்தினரைச் சேய்மைக்கண்கண்டுழிஇன் முகமும், அது பற்றி கண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன் பட்டவழி நன்ருற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்ற”ளுேடு முற்றிலும் ஒத்துகிற்றல் உணர்ந்து பாராட்டற் குரித்தாம் :

'ஒன்றிய

கேளிர் போலக் கேள் கொளல் வேண்டி, வேளாண் வாயில் வேட்பக் கூறிக் கண்ணிற் காண எண்ணுவழி இரீஇப் பருகு வன்ன அருகா நோக்கமோடு உருகு பவைபோல் என்பு குளிர் கொளி.இ.”

(பொருநர் : எக-அ) சோணுட்டு வளமும், அந் நாடாண்ட கரிகாலன் பெருமையும் விளங்கப் பாடிய புலவர், அக்காலத்து மக்கள் மேற்கொண்ட தனிநாகரிக வாழ்வினை விளக்கும் சிற்சில பகுதிகளையும் இடையிடையே கூறிச் சென்று ளார். தமிழகத்தின் பேரூர்தோறும் கிருவிழா நிகழும்; விழாக் காண வருவார் அனைவர்க்கும், பெருஞ் சோறளித்துப்

போற்றுவர், அவ்வூர் வாழ்மக்கள்; அம் மக்கள், ساسازی .