பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பேயனர்

சென்று ளார் ; உவமை போலும் செய்யுள் அணி கருதி அவர் காட்டும் சில செய்திகள், அவர் உள்ளத்தை உணரத் துணை புரிந்துள்ளன.

தமிழகம், தன்னேரில்லா அரசுபெற்றுத் தழைத் திருக்க காலம், மூவேந்தர் அரசோச்சிய காலமாம் என்ற பாராட்டுரைகளுக்கிடையே, தன்னேரில்லா அரசோச்சிய அத் தமிழகம், தாழ்ந்தமைக்கும், அம் மூவேங்கர்களும், அவர்கள் காலத்தே தமிழ்நாட்டின் சிறு சிறு பகுதிகளே ஆங்காங்கே ஆண்டிருக்க குறுகில மன்னர்களுமே காான மாம் என்ற பழியுரைகளையும் எழுதவேண்டிய விலையி லேயே அன்றைய அரசியல் அமைந்திருந்தது. மூவேர் தர்கள் ஒற்றுமைகொண்டு ஊராண்டவரல்லர் ; அவர் ஒவ்: வொருவரும் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ண முடையாாவர் ; ஒரு குடியில் ஒரு காலத்தே ஆற்றல் மிக்க பேரரசன் ஒருவன் பிறந்துவிட்டால், அவன் பிற அரசுகளே யெல்லாம் பணியவைத்துப் போாசனப் வாழ வேண்டும் என்று எண்ணுவதும், அவன் ஆற்றலும், செல்வமும் கண்டு அழுக்காறுகொண்ட ஏனேய அரசர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவனே அழிக்க வழி கோலுவதும் அக்கால வழக்கமாம் ; ஒரு குடியிற் பிறந்தார், பிறகுடியிற் பிறந்தாரோடு பகைத்து வாழ்தலோடு கின்றால்லர் ; ஒரு குடியிற் பிறந்தவர்களே ஒருவரோடொருவர் பகைத்துப் போர் மேற்கொள்வர்; அம்மட்டோ தங்தை மகனே எதிர்ப்பன் ; மகன் தந்தைமேல் போருக்கு எழுவன் ; பழைய தமிழகத்தின் அரசியற் பெருநெறி இது ; அரச ரிடையே நிலவும் இவ் வாசியல் முறையால், தமிழகம் பெற்ற அழிவு அம்மம்ம கொடிது கொடிது, !

தமிழகம், அத்தாழ்கிலேயின் நீங்கித் தன்னேரில்லாப் பேரரசாய் வாழ விரும்பினர் அக்காலப் புலவர் பலரும்; அவருள் முடத்தாமக்கண்ணியாரும் ஒருவர்; தமிழகத் திற்குத் தாழ்வுகரும் இங்கிலே ஒழியவேண்டுமாயின், அங் நாடாள் உரிமையுடையாய தமிழ் அரசர் மூவரும் தம்முள் பகையொழிந்து, ஒற்றுமை புளத்தாகி ஊாள் முன்வால்