பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையோடக் கோவனுர் 113.

மல் தடுத்து கிறுத்தத் தன்னிடையே அமைந்த அணைகளே அழித்துச் செல்லும் விகழ்ச்சி எனவும் அவர் கூறுவன வற்றை அறிந்து மகிழ்க.

'ஆடல் அறியா அரிவை போலவும்,

ஊடல் அறியா உவகையள் போலவும், வேண்டுவழி நடந்து தாங்குதடை பொருது.”

(பரிபாடல் எ : க.எ-க). வெள்ளம், ஊரையும், சேரியையும் ஒருங்கே அழித் தும், விளை நிலங்களே வேருக்கிப் பாழ் செய்தும் பெருகி. ஒடுவதைக் கண்ட உழவர், அதன் போக்கை மாற்றி அமைக்க வேண்டும் எலும் ஆர்வத்தால் விரைந்து தொழி லாற்றத் தொடங்கும் அவர் வேட்கைக்கு, ஊடலைப் பல காலும் உணர்த்தவும் உணராது ஊடி கிற்கும் மகளிாை, ஊடல் தீர்க்க விரும்பும், அவர் கணவர்தம் ஆசைப் பெருக் கினை உவமை காட்டிய சிறப்பு, உயர்ந்தோர் பாராட்டும் பண்புடையதாம் :

' வித்திடு புலம் மேடாயிற்று என,

உணர்த்த உணரா ஒள்ளிழை மாதரைப் புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்தில் துனைந்து சினேவளர் வாளேயிற் கிளையொடு கெழிஇப் பழன உழவர் பாய் புனல் பாத் தந்து ?

(பரி : எ, கட்டு-வடக)

பே.-8