பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன்பரணர் 123;

அவர்தம் தொழில் மறக்குமளவும் பெரும் பொருள் கொடுத் தும் சிறப்பித்துளான்.

கண்டீரக்கோப் பெருநள்ளி நல்கிய பெருவளத்தால், அவர்கள்தம் பண்அறி அறிவினை இழந்ததைப் போன்றே, வல்வில் ஒரி வழங்கிய வற்றப் பெரும் பொருள் உடைமை யால், அவர்கள், இசையெழுப்பிப் பாடலும், ஆடலுமாய' தம் தொழிலை மறந்தனர் எனப் புலவர் கூறுவர். 'கடும்பே, பனிநீர்ப்பூவா மணிமிடை குவளை

வானுர்த் தொடுத்த கண்ணியும், கலனும் யானே யினத்தொடு பெற்றனர் நீங்கிப் பசியாராக ல் மாறுகொல் விசிபிணிக் கடடுகொள் இன்னியம் கறங்க ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே.” -

(புறம்: கடுக.) காட்டிடை நடந்த பெரும்போரில் கன் கணவன் விழுப்புண் பெற்று வீழ்த்தாகை, ஆண்டு அவன் உடலைத் தேடிச் சென்ற அவன் மனைவி, அந்தோ!' 'ஐயோ!' என வாய்விட்டுக் கதறி அழுவாளாயின், அவள் அழுகை யொலி கேட்டு, அக்காட்டுள் உறை கடும்புலி வந்து அவன் உடலையும் தின்றுவிடுமே; அதனல் அவன் உடலைக் கண்டு. மகிழ்தலும் இன் ருமே என்ற அச்சத்தால் வாய்விட்டு அழு தலும் செய்திலள்; அவன் உடலை அச்சம் நிறைந்த அக் காட்டினின்றும் எடுத்துச் சென்று காக்கலாம். எனிலோ, அகன்ற மார்புடை அவன் உடலைஎடுத்துச் சேறல் அவளால் இயலாது. ஆதலின், அதையும் அவள் செய்திலள். இவ்வாறு வருக்கிய அவள், தன்னே இவ்வாறு வருத்திய கூற்றமும், இவ்வாறே வருந்தி அழிக! எனக்கூறி வருந்தினுள் எனப் பாடிய பாட்டொன்று, பண்டைத் தமிழகத்தின் படைமற" வர் பண்பாட்டினே உணர்த்தி கிற்கிறது.

'ஐயோ! எனின், யான் புலி அஞ்சுவலே;

அனைத்தனன் கொளினே, அகன்மார்பு எடுக்க வல்லேன்; என்போல் பெருவி கிர்ப்பு உறுக! நின்னை இன்ன துற்ற அறனில் கூற்றே.” (புறம்: உடுடு):