பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.0. வெண்கொற்றன்

கொற்றன் என்பது இவர் இயற்பெயர். இவர் பெயர்க்கு முன் வந்துள்ள வெண் என்ற சிறப்பு வருதற் குரிய காரணம் விளங்கவில்லை. இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம்பெற்றுளது.

ஊதைக் காற்றுகிய வாடைவீசும் குளிர்காலத்தே ஈ முதலிய சிற்றுயிர்களின் தோற்றம் மிகுதியாம் என்பதும், அக்காலத்தே அவற்ருல் மக்களே அல்லாமல், மாடு முதலா வினவும் பெருந்துயர் உறம் என்பதும், அக்காலத்து இராக்காலத்தே, ஈக்கள் தன்னே மொய்த்துத் துன்புறுத்தல் அஞ்சிய பசு, அவை கன்னேத் தீண்டாமை குறித்துத் தன் தலையினைப் பலகாலும் ஆட்ம்ே என்பதும், அவ்வாறு அது ஆட்டுந்தொறும், அதன் கழுத்தில் கட்டப்பெற்ற மணி ஒலிக்கும் என்பதும், எல்லாரும் உறங்கும் நள்ளிரவில் எழும் அம்மணி ஒலி, தனித்துத் துயில்உருது, துயர்உற்று வாழும் மகளிர்க்குப் போச்சம் தரும் என்பதும் இவர் பாட்டில் விளங்க உரைக்கப் பெற்றுள்ளன.

'சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்

பொறையரு நோயொடு புலம்பு.அலேக் கலங்கிப் பிறரும் கேட்குநர் உளர்கொல் இறைசிறந்து ஊதை தாற்றும் கூதிர் யாமத்து ஆன் நுளம்பு உலம்புகொறு உளம்பும் நாாவில் கொடுமணி நல்கூர் குரலே.” (குறுங் அசு)