பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉ. வெண்மணிப்பூதி

இகர ஈறுகொண்ட பெயருடைமை நோக்கி இவரைப் பெண்பாற் புலவருள் ஒருவராகக் கொள்வாரும் உளர். வெள்ளுர்கிழார் மகளுர் ஒருவரின் பெயரும் வெண்பூதியார் என விருதலை நோக்கின் அவ்வாறு கொள்வது பொருங் காமை தெளிவாம். பூதி, திருநீறு எனப் பொருள்பட வரும் விபூதி என்பதன் தலைக்குறை. ஆகவே இவர் சைவ சாவர் எனக் கோடலும் உண்டு. அரியலூர்ப் பக்கத்தே வெண்மணி என்ருேர் ஊர் உளது; இவரை அவ்வூரின சாகக் கொள்வது பொருந்தும். இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது.

களவொழுக்கம் மேற்கொண்ட ஒர் ஆண்மகன், தான்் காதலித்த பெண்ணே விரைவில் மணந்துகொள்ளாளுக, அதனுல் வருங்கிய அப்பெண், அவ்வருத்தத்தால் தன் தோள்களும் மெலிந்துவிட்டன : அம்மெலிவினேக் காய் அறியின் தம் ஒழுக்கத்திற்கும், உறவிற்கும் கேடுண்டாம் என்பதை எடுத்துக் கூறி அவனே விரைந்து வந்து வரைந்து கொள்ள வேண்டுவாள், அதை விளங்க உரைக்காது, “ கோழி தலைவன் அழகினே நம் கண்களும் கண்டன : அவன் கூறிய இனிய சொற்களே ஏம் காதுகளும் கேட்டன; ஆனால் இப்போது அவனேக் காண்பதோ, அவன் சொல்லைக் கேட்பதோ அரிதாகிவிட்டது , இருந்தும் நம் கண்களும், காதகளும், அதனுல் கவலைகொண்டன அல்ல ; ஆனல் இத் தோள் மட்டும், அவனேப் பெற்ற அன்று மகிழ்ந்தது ; அவனேப் பெறமாட்டாமையால் இப்போது வாடி வருந்து வானேன் ' என்று கூறிக் குறிப்பால் உணர்த்தினுள் என்ற உயர்ந்த கருத்தமைய வந்துள்ளது அப்பாட்டு.

' கொண்கன்

கண்டன மன்னம் கண்ணே ; அவன் சொல் கேட்டன மன்எம் செவியே. ; மற்றவன் மணப்பின் மாணலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப எம்தடமென் தோளே.”

(குறுங் : உகக)