பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. வெள்ளாடியனுர்

இவர் பெயர், வெண்வட்டியார், வேளாவட்டனன் என்றெல்லாம் காணப்படும். பொருட் சிறப்பு, அப் பொருளைத் தேடிப் பெறும் அருமை, அப் பொருளை அடைய எண்ணும் உள்ளத்தின் உரம் ஆய இவை குறித்துப் புலவர் கூறும் பொருளுாை, பொன்னே போல் போற்றத் தக்கனவாம். ஒரு வினேயைத் தொடங்குவார், தொடங்கிய அவ்வினையை இடையே கை விடுதல் ஆண்மை யன்று இடுக்கண்கள் பல அடுக்கி வரினும், அவை நோக்கி எடுத்த வினையை இடையே விடாது கின்று முடித் தற்கு உள்ளத்தே ஊக்கமும் உாமும் மிகமிகத் தேவை. பொருள் பெற விரும்புவார், அதை எவ்வாற்ருனும் பெற்று விடுதல் வேண்டும் என விரும்புதல் கூடாது ; அப் பொருள் அறவழியுறுதலேயே விரும்புதல் வேண்டும் ; இடுக்கண்ட்டிலும் இளிவந்த செய்தல் கூடாது; ஈன்ருள் பசி காணும் பருவத்தும், சான்ருேர் பழிக்கும் செயல் புரி தல் கூடாது; பழிமலைக்கு எய்திய ஆக்கத்தின் சான்ருேர் கழிதல்குவேதலே; ஆகவே, அப்பொருள் அறவழி வரு தலையே விரும்புதல் வேண்டும்; அதற்கு ஏற்ப அருஞ் செயல் ஆற்றல் வேண்டும்; புலி, பசியால் பெருந்தியர் உற்ற காலத்தும், இடப் பக்கத்தே வீழ்ந்ததனே உண்ண எண்ணுது ; அத்தகைய உள்ள உாம் வேண்டும் என்றெல் லாம், பொருள் பெற விரும்புவான் மேற்கொள்ளும் வினைத் தாய்மையினே விளங்க உரைத்துள்ளார். - - தொடங்குவினை தவிா அசைவில் கோன்தாள்

கிடந்து உயிர் மறுகுவதாயினும் இடப்படின் வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வில் உள்ளம் கலைத்தலைச் சிறப்பச் செய்வினைக்கு அகன்ற காலே.” (அகம்: உக} . மனிதனே மாண்புடையளுக்குவது மானமும், நான மும் என்ற இவ்விரு நற்பண்புகள்ே ஆம்; இவை இரண்டும்.