பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூச. வெள்ளியந்தின்னனுர்

வெள்ளியந்தின்னஞர் என்ற இப்பெயர் இவர்க்கு ஏன் இடப்பட்டுளது? இவர் தம் பிறப்பு, குலம் யாவை? என் பன குறித்து ஏதும் அறிதற்கில்லே. இவர் பாடிய பாட் டொன்று சற்றிணைக்கண் இடம் பெற்ற ளது. ஒரு பொருள் ஒருவர்க்கு இன்பம் அளித்தலும், அன்றித் துன்பம் கரு தலும், அவர் தம் உள்ள இயல்பை ஒட்டியதாம் ; ஒருவர் உள்ளம் மகிழ்ந்திருப்புழி, காணும் எப்பொருளும் மகிழ்ச் சியினே அளிக்கும். அவர் தம் உள்ளம் துன்பத் தொடர் புடையதாயவழி, அவையே துன்பம் தருவனவாய்த் தோன்றும். ஆகவே, உலக இன்ப துன்பங்களுக்கு உள் வளமே காரணமாம். இதை உணர்ந்தே, "செல்வம் என்பது சிந்தையின் கிறைவே; அல்கா நல்குரவு அவாவெனப் படுமே” என்று உரைத்துச் சென்றனர் பெரியோர். இக்கருத்து வெளிப்படும் வகையில் வந்ததொரு பாட்டைப் புலவர் பாடியுள்ளார் ; புலால் காறும் பரதவர் தம் சிற்றார், அப்பாதவர் மகளைக் காண்டற்கு முன் இன்பம் தந்தது; அவளேக் கண்டு, ஆனால், அவளைப் பெறமாட்டாக் காலத்தே அச்சிற்றார் துன்பம் தருவதாய் இருந்தது எனக் கூறிஞன் ஒரு தலைவன் என்று கூறியுள்ளார் அப்பாட்டில். இன்ப, துன்பங்கட்கு உள்ளமே காரணம்; அவ்வுள்ளத்தைத் தொழிற்படுத்தவல்ல ஆற்றல் அவளுக்கே உண்டு எனக் கூறும் ஆண் உள்ளத்தின் அழகினேயும், பெண்ணுலகின் பெருமையினையும் பாாட்டுவோமாக! -

'துறைகணி யிருந்த பாக்கமும் உறைானி

இனிதுமன் அளிதோ தான்ே...... மீனெறி பாதவர் மடமகள் மானமர் கோக்கம் காணு ஆங்கே?

(நற் : க.க)