பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வேளாசான்

ஆசான், ஆசிரியன் எனும் பொருள் உடையது; அத் தனாாய்ப் பிறந்தார் அனைவரும் வேள்வி இயற்றும் ஆசிரி :பாகி விடுவதிலர்; அவருட் சிலர்மட்டுமே அத்தொழில் உடையாாவர்; மதுரையில் வாழ்ந்த அத்தகைய ஆசிரியர் களுள் நம்புலவர் ஒருவராதலின், இவர் மதுரை வேளா சான் என அழைக்கப் பெற்ருர்,

பழங்கால அரசர்கள், ஒருவரையொருவர் பகைத்துப் போரிட்டு வாழ்வதையே வாழ்வாகக் கொண்டிருந்தமை யால், அக்காலத்தில் நாட்டில் எப்போதும் போர் கிகழ்ந்து கொண்டே யிருக்கும் ; இதல்ை ஊர்கள் பாழாகும்; மக்கள் மடிவர் ; நாட்டில் அமைதி குன்றும். இக்கொடுங் காட்சியினைக் காணப் பொருத அக்காலப் பெரியோர்கள், போர்மேற் கொண்ட இரு அரசர்களையும் அடுத்து அறவுரை கூறிப் போர் நீக்க முயன்றுள்ளனர் ; அவ்வாறு தாதுபோதல், ஆன்றவின்தடங்கிய சான்ருேர்க்கே இயலும் ஆதலின், ஒதலும், துாதும் உயர்ந்தோர் மேன ’ எனத் தொல்காப்பியர் விதியும் வகுத்துளார்.

ஒர் அந்தணன் துரது செல்ல, போர் கின்ற நிகழ்ச்சி யொன்றைப் புலவர் கூறியுள்ளார். இரண்டு பெரிய அரசர் கள் பகைத்தனர் ; ஒர் அரசன் கோட்டையை மற்ருேர் அரசன் முற்றுகை செய்துவிட்டான் ; கோட்டைக்குரி யோன், கோட்டையின் வாயிலை அடைத்துச் சீப்புச் செறித்துவிட்டான்; முற்றுகையிட்டிருப்போனும், மதில் மீது ஏறிப் போரிடுதற்கு வேண்டும் ஏணிகளையும் பொருத்திவிட்டான் ; இவ்வாறு இருவரும் போருடற் மற்கு ஆவன புரிந்து இரவு கழிவதைக் காத்திருந்தனர் ; அங்கிலையில், புறத்தே தங்கியிருக்கும் அாசன் பாசறையி .ணின்றும் வந்த ஒரு பார்ப்பான், களர்ந்த மேனியும், தள் உளாடிய நடையும் உடையணுய்க் கோட்டைக் காவலனையும் கேட்காதே உட்புகுந்தான்்; சிறிது நேரத்திற்கெல்லாம்