பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்க.ை வேளா தத்தர் தத்தன் என்பது இவர் இயற்பெயர் : இவர் பெயர்க்கு முன்வரும் வேளா என்ற அடை என் வந்தது என்பது விளங்கவில்லை; வேளாளன் தத்தன் என்பது வேளாதத் தன் எனக் குறைந்தது எனக் கூறுவர் சிலர் , அஃது உண்மையோ, பொய்யோ அறிதற்கில்லை.

- இவர் மாலைக் கடலிடையே தோன்றும் மகியத்தின் அழகிய காட்சியினையும், மலைகளிடையே ஒடி இழியும் அருவிகளின் வெண்ணிறக் காட்சிகளையும் கண்டு மகிழ்ந் தவர்; தலைவன் ஞாயிறு போன்ற அறவுள்ள முடையவன் ; அவன் மனைவி, ஞாயிறு, கீழ்த் திசைக்கண் இருப்பின் கிழக்கு நோக்குவதும், அவன் மேற்றிசை செல்லின் மேற்கு நோக்குவதும், அவன் நடுவானத்தே விளங்கின் உச்சியை நோக்குவதும் ஆய இயல்பினேயுடைய நெருஞ்சி மலர்களைப்போல் தலைவன் எண்ணியதையே எண்னும் இயல்புடையாள் எனக், கணவன், மனேவியர்க்குள்ள உறவு முறையினேயும் உணர்ந்தவர். இவ்வளவு பெருங் கருத்துக்களையும், சிறு செய்யுளொன்றில் அடக்கிக் கூற வல்ல ஆற்றல் வாய்ந்தவர்.

தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதுகின்ருன் என உணர்ந்த தோழி, தலைமகள்பால் அதைக்கூறி, அவன் பிரிந்த வழி, எவ்வாறு ஆற்றியிருப்பையோ’ என்று கவன்ற தோழிக்கு, 'தோழி! அவர் எண்ணமே, என் எண்ணமாம் ஆதலின் ஆற்றுவேன் ' என்று கூறினுள் என்பதை இந்தப் பாட்டின் மூலம் புலப்படுத்துகின்றார் புலவர்.

  • எழுதரு மதியம் கடற் கண் டாஅங்கு

ஒழுகு வெள்ளருவி, ஒங்குமலே நாடன், ஞாயிறு அனையன் ; தோழி ! நெருஞ்சி அனைய, என்பெரும்பணைத் தோளே."

(குறும் : கூகடு) مسسسم مسنسسسد