பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0. முடிவுரை

கல்வியும் செல்வமும் நாட்டின் இரு கண்களாம்; செல்வமும், கல்வியும் சிறக்கப்பெற்ற நாடே, உலகில் சீரும், சிறப்பும் பெற்ற பெருதாடெனப் போற்றப்பெறும். வை வாய்க்கப்பெரு நாடு, நாடாதாது; காடெனவே காட்சிதரும், கல்வியும், செல்வமும் ஒன்றையொன்று இன்றியமையாதன ; அவற்றுள் ஒன்றைப் பெற்று, ஒன்றைப் பெரு நாடு பெருமையுறுவதில்லை என்பதெல் ல்ாம் உண்மையேயெனினும், அவ்விரண்டனுள் கல்வியைப் பெற்றுச் செல்வத்தைப் பெரு நாடு பெருங் கேடுறுவ தில்லை ; ஆனால், இதற்கு டிாருதச் செல்வத்தைச் சிறக்கப் பெற்றுக் கல்வியைக் கண்ணெடுத்தும் பாராத காடு, கல்வி, செல்வம் ஆய அவ்விரண்டினேயும் ஒருங்கே இழந்த காட் டைக்காட்டிலும் மிக்கதொரு பெருங் கேடுற்றுப்பாழுறும். கல்வி, செல்வம் ஆய இவ்விரண்டினேயும் ஒருங்கே பெறுதல் அரிதினும் அரிதாம். இரு வேறு உலகத் தியற்கை ; கிருவேறு தெள்ளியாதலும் வேறு." எனக் கூறுவர் வள்ளுவப் பெருந்தகையாரும். கல்வியுள்ள இடத்தே, செல்வம் கில்லாது; செல்வம் உள்ள இடத்தே, கல்வி கில்லாது. கல்வியுடையார், செல்வமுடையாரா தலும், செல்வமுடையார், கல்வியுடையாாதலும் இலர்; அறிவுடையார், பொருளிலும் அறிவே ஆற்றலுடையது என்பதையும், தொட்டனத்துாறும் மணற்கேணி ; மார் தர்க்குக் கற்றனைத் தாறும் அறிவு,' "தாங்கற்ற நூலளவே யாகுமாம் துண்ணறிவு,” வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற உண்மைகளையும் உணர்ந்தவ ாதலின், அப் பொருள்பெறு முயற்சி மேற்கொள்ளாது, அறிவுவளர் வழியினேயே மேற்கொள்வதால், பொருள் அவர்பால் அடைக்கிலது. -

பொருளுடையார், தம் அறியாத் தன்மையிஞல் பொருளே எல்லாம் என எண்ணி விடுவதாலும் செல்வத்தை இயற்றலும், ஈட்டலும், காக்கலும், காத்து

பே.-10 .