பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பேயனர்

வகுத்தலும் வல்லார்க்கே இயலும். ஆதலின், அவர்கள், தம் வாழ்நாட்களை யெல்லாம், அப்பொருளே ஈட்டலும், காத்தலுமாய தொழிற்கே கழித்துவிடுவதாலும் அன்னர் அறிவைப் பெற வேண்டும் என்ற எண்ணமற்றவராகி விடுகின்றனர். இவ்விருவர் விலைகளும் குறைபாடுடை பனவே அறிவுடையார் நல்வாழ்வு வாழ, அவர்க்குப் பொருள் தேவை. பொருளுடையார், அப் பொருளே நல்வழியிற் பேண, அவர்க்கு அறிவு தேவை ; ஆகவே, ஒவ்வொருவரும் இரண்டையும் பெறுதல் வேண்டும். ஆகவே, எந்த நாட்டில், எந்தக் காலத்தில், மிகுந்த கல்வியும், திரண்ட செல்வமும் ஒருங்கே பெருகி மண்டிக் கிடக்கின்றனவோ, அந்த நாடு ஒன்று கான், அக்கால நாடு களுள்ளே, நாகரிகத்தின் நடுநாயகமாய் விளங்கும்.

அவ்வாறு கல்வியும், செல்வமும் சிறக்கப் பெற்ற நாட்டிலும் அவ்விரண்டனையும் ஒருங்கே பெற்ருர் அரிய ராவர்; பொருள் பெருமல் அறிவொன்றையே பெற்ருரும். அறிவு பெருமல், பொருளொன்றையே பெற்ருருமே மிகப் பலராவர் ; ஆதலின், அங்காட்டில் பொருளுடையார்க்கு அறிவுடையார் வழிகாட்டுவோராகவும், அக் கல்வியுடை யார் காட்டிய வழியில், செல்வம் உடையார் செல்வோ ாாகவும் வாழ்தல் வேண்டும். அதனுல் அவர்களும் வாழ்வர் ; உலகமும் வாழும். அவ்வாறின்றி, உலகம் பொருளுடையார் வழி நடப்பது என்ருகிவிட்டால், அவ் வுலகம் அவர்கள் அறியாமை வயப்பட்டு அழிதல் உறுதி.

உலக நிகழ்ச்சிகளே உற்று நோக்கின், முற்றிலும் முரண்பட்ட இரு பொருள்கள், ஒன்றையொன்று இன்றி யமையாதனவாய்க் கொண்டு இணைந்து தொழில் புரிவதா லேயே, உலக வாழ்வு வளம்பல பெற்று, இன்பம் பெருகி இயங்குகிறது என்ற உண்மையுணரப்படும். அறிவுரு வாகிய உயிரும், அறிவில்லா வுடலும் மாறுபட்டனவே யென்றலும், அவை ஒன்றையொன்று இன்றியமையா நிலையில், ஒன்றுபடுவதாலேயே, மக்கள் வாழ்வு நடைபெறு கிறது. எண்பொறிகளே ஆக்கித் தரும் அறிவு நால்