பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 147

கைவரப் பெற்ருரும், அறிஞரும் அங் எண் பொறிகளே இயக்கும் கல்லா மக்களும் முற்றிலும் மாறுபட்டவரே யெனினும், அவர் இருவரும் ஒன்றுபட்டுழைப்பதாலேயே, உலக மக்கள் வாழ்வு வளம் பெறுவதைக் காண்கிருேம்.

சட்டக்கலை தேர்ந்த கிேயாளனும், படைபல பயின்று பெற்ற உடல்வலியுடையாலும், முற்றிலும் முரண்பட்ட இருவேறு கிலேயினரே பெனினும், முன்னேன் மொழி வதைப் பின்னேன் எற்றுப் போற்றி நடப்பதாலேயே உலகில் அமைதி சிலவக் காண்கிருேம். இங்கில மாறின், உலகில் யாண்டும், எக்காலத்தும் அமைதி காண்பது அரிதாகிவிடும். கண்ணும், காதும் முதலியன ஒன்றன் நன்மை தீமைகளைப் பிரித்தறியும் உணர்வுடைய அறிகருவி களாம் ; கையும் காலும் முதலாயின, அவ்வுணர்வற்றுத் தொழிலாற்றுதற்கென்றே தோன்றிய தொழிற் கருவி களாம். கண்ணும், காதும் முகலாய அறி கருவிகள் அறி வித்தவாறே, கையும் காலுமாகிய தொழிற் கருவிகள் தொழிலாற்றினுல்தான்், உடலிற்கு ஊறுண்டாகாது இன்பம் உண்டாம். அவ்வாறின்றி, கையும், காலும் செய்யும் அவ்வளவு கொழிலேயும் பார்த்துக் கொண்டி குக்கவே, கண்ணும் காதும் உள்ளன என்று கொண்டு இயங்குவதாயின், உடல் அழிவது உறுதி, உறுதி, முக் காலும் உறுதி. இவ்வாறே, ஒரு நாட்டில் கல்வாழ்வு நடைபெற வேண்டுமாயின், ஏவும் வினே முதல் கல்வியாள ாகவும், இயற்றும் வினைமுதல் செல்வராகவும் அமைதல்

வேண்டும்.

நம் தமிழகம், பண்டு பெருமைக்குரிய நாடாக விளங் கிற்று என்றால், அதற்குக் காரணம் அக்காலத்தில் அறிவன அறிந்த அறிவுடையோராய்ப் புலவர் சொல்வழி, அக்கால அரசர்களும், பிற செல்வர்களும் பின்பற்றி நடந்தனர் என்பதே; ஆகவே, ஒரு நாடு வாழ்வதும், தாழ்வதும் அந்நாட்டுச் சான்ருேர் வாழ்வாலும், தாழ்வாலுமேயாம் என்பதை உணர்ந்து வாழ்ந்தனர் அக்காலத் தமிழர். ' எவ் வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே'