பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பேயனர்

என்றார் ஒளவையார். சான் ருேர் பலர், யான் வாழும் ஊரே ' என்றார் பிசிமாந்தைப் பெருந்தகையார் ; வழக் கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே ; கிகழ்ச்சி அவர்கட் டாகலான் ” என்றார், ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பி யனர் : தக்காரும், தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுவின் றேல், மண்புக்கு மாய்வது மன் ’ என்றார் திருவள்ளுவனர்.

இவ்வுண்மை உணர்ந்த அறிஞரும், அரசரும், பண்டு நம் தமிழகத்தே பெருக வாழ்ந்தனர். அக்கால அறி ஞர்கள், தம் வயிற்றுப்பாட்டிற்கு வழி காண்பதே வாழ்க்கை; அதற்காகப் பிறரைப் பாடிப் பிழைப்பதே தம் தொழில் என்பதை மறந்து, தவறு கண்டவழி, அத் தவறு செய்தான்் நாடாள் அரசனே யெனினும், அவன் அரசன்; நமக்கு வேண்டும் பொன்னும், பொருளும் அளித்துப் புரப்பவன் ; ஆகவே, அவனேக் கடுஞ் சொல் கூறிக் கண் டித்தல் கூடாது என எண்ணுது, இடித்துக் கூறித் திருத்து வதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். அரசரும் தம் பால் வந்து கின்று இரந்து கிற்கும் எளிய வாழ்க்கையினை யுடைய புலவர்கள், தம்மை அண்டிப் பிழைக்க வந்தவரே யல்லால், அறிஆட்ட வந்தவரல்லர் என்று இகழ்ந்து விடாது, அவர் அறிவினுக்கடிபணிந்து, அவர் ஆட்டிய வாறு ஆள்வதே அரசர்க்கு அழகு எனக் கொண்டு, அவர் கூறும் பொருளுரைகளைப் பொன்னேபோல் போற்றி மேற்கொண்டனர். இவ்வாறு புலவர் வழிகாட்ட, அவ் வழியே அரசர்கள் சென்ற காரணத்தால், செந்தமிழ் நாடு சீரும், சிறப்பும் செழிக்க, பாரோர் போற்றும் பெருகிலை யுற்றுத் திகழ்ந்தது.

இவ்வாறு நாடு வாழ, நல்லறிவூட்டி வாழ்ந்திருந்தனர் புலவர் நானூற்று அறுபத்தெண்மர். அவர்கள் நானூற்றறு பத்தெண்மரும், புலமையுடைமையால் ஒரியல்புடையாய்க் காணப்படுகின்றனரே யெனினும், குலத்தால், குணத்தால் மேற்கொண்ட தொழிலால், ஆற்றிய தொண்டால் அவர் பல்லாற்ருனும் வேறுபட்டவரேயாவர். சங்க காலத் தமிழ்