பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 151

என்ற அவ்வளவோடு கின்று விட்டாரல்லர் , அன்றைய தமிழ்கத்தின் அரசியல் வாழ்வில், அவர்கள் மேற்கொண்ட பணிகள் பலப்பல; அவர்கள், அக்கால அரசவைதோறும் சென்று சென்று, அரசர்க்கும் மக்கட்கும் ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா; பழந்தமிழ் காட்டின் பெரு மையில் புலவர்க்கும் பெரும்பங்குண்டு ; அப்புலவர்களின் வரலாற்றினை விளங்க உணர்வார், அவர்கள் அன்று ஆற்றிய தொண்டின் அருமை பெருமைகளே உணராமம் போகார். -

தமிழகம் கன்னேரில்லா அரசு பெற்றுத் தழைத் திருந்த காலம், மூவேந்தர் அரசோச்சிய காலமாம் என்ற பாராட்டுரைகளுக்கிடையே கன்னேரில்லா அரசோச்சி அத் தமிழகம் தாழ்ந்தமைக்கும், அம் மூவேந்தர்களும், அவர்கள் காலத்தே தமிழ் நாட்டின் சிறுசிறு பகுதிகளே ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்த குறுகில மன்னர்களுமே கிாாணமாம் என்ற பழியுரைகளையும் எழுதவேண்டிய நிலையிலேயே அன்றைய அரசியல் அமைந்திருந்தது. தமி ழாசர் மூவரும், ஒற்றுமை கொண்டு ஊராண்டவரல்லர்; அவர் ஒவ்வொருவரும், பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணமுடையவராவர். ஒரு குடியில், ஒரு காலத்தே ஆற்றல் மிக்க அரசனுெருவன் தோன்றி விட்டால், அவன், பிற அச்சுகளையெல்லாம் பணிய வைத்துப் பேரரசனுய் வாழவேண்டும் என்று எண்ணு வதும், அவன் ஆற்றலும் செல்வமும் கண்டு மனம் பொருத ஏனய அரசர்கள் அனைவரும் ஒன்று கூடி, அவனே அழிக்க வழிகோலுவதும் அக்கால வழக்கமாம். ஒரு குடியிற் பிறந்தார், பிறகுடியிற் பிறந்தாரோடு பகைத்து வாழ்தலோடு கின்றால்லர் ; ஒரு குடியிற் பிறந்தவர்களே, ஒருவரோடொருவர் பகைத்துப் போர்மேற்கொண்டனர்; அம்மட்டோ கங்கை, மகனே எதிர்த்தான்் ; மகன் தந்தை மேல் போர்கொண்டு எழுந்தான்். பழைய தமிழகத்தின் அரசியல் நெறியிது. இவ்வரசியல் முறையால், தமிழகம் முழுதும் அழிந்து, மண்ளுேடு மண்ணுய் மறைந்து