பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 பேயஞர்

போகாமல், தமிழகம் என்ற பெயரால் இன்றும் ஒரு நாடுளது என்ற இச்சிலைக்கு அக்காலத்தே வாழ்ந்த புலவர் களே காணாவர். வாழப்பிறந்த உயிர்கள் வாழாது வீணே மடிவது காண, அவர்கள் உள்ளம் பொருராயினர் ; அதனல், அவ்வுயிர்கள் அழிவதைத் தடுக்கத் தம்மாலாவன செய்வதே அறிவுடையோர் கடனும் என்ற கொள்கை

னாய் வாழ்ந்தனர் ; அவர்கள் தலையீட்டால் தடையுற்ற போர்களும், அதனல் பிழைத்து உயிர்வாழ்ந்த உயிர்களின் தொகையும் மிகப் பலவாம். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய இரு சோழகுலச் சிற்றரசர் இருவர்க்கிடையே, ஆவூர், உறையூர் குறித்த எழுந்த போர்களைப் போக்கப் பெரிதும் முயன்றார் கோஆர்கிழார் ; சோலுக்குரிய கரு ஆரை முற்றி அழிக்க முனேக்க குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போர் வெறியைப் போக்கினர் ஆலத்தார் கிழார்.

தன்னைப் பகைத்தெழுத்த தன் மக்கள்மீது போர் கொண்டெழுந்த கோப்பெருஞ்சோழன் கொடுஞ்செயலைப் போக்கினர் புல்லாற்றார் எயிற்றியனுர் , அதிகமான் நெடுமானஞ்சிக்கும், தொண்டைமானுக்கும் இடையே பகை வளாாது தடுக்க தொண்டைமான் அவைக்குத் துது சென்றார் ஒளவையார், ஆதியமான் நெடுமானஞ்சிக்கும், அவன் பகைவய்ை, அவன் தகடுரை அழித்த பெருஞ்சோ விரும்பொறைக்கும் இடையே வளர்ந்த பகையைப் போக்கத் தாமும் முயன்றதோடு, கம்போலும் பிற புலவர் துணைகொண்டும் முயன்றார் அரிசில்கிழார். பாரியின் பறம்பாண முற்றி அழிக்க முன்வந்த மூவேந்தர்க்கு அறிவுரை பல வழங்கி, அவர் போர் வேட்கையைப் போக்க எண்ணினர் கபிலர். இவ்வாறு, அக்காலப் புலவர் பலரும், பாடிப் பிழைப்பதே தம் தொழில் என்று அடங்கியிராது, அக்கால அரசர்கள், நெறிதவறுக்தோறும், அஞ்சாது முன்வந்து, ஏற்றவகையால் இடித்துக்கூறித் திருத்தியகி ேைலயே, தமிழொலி கேட்கும் நாடு ஒன்று, உலகின் ஒரு

பகுதியாகத் திகழ்கின்றது. வாழ்க அப் புலவர்கள்.