பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பேயனர்

சீத்தலைச் சாத்தனர் என்றும், ஊரும், பெயரும் அறிந்த தோடு அவர் தந்தை பெயரையும் அறியப்பெறின், மதுரை அளக்கர் ஞாழலார் மகளுர் மள்ளனர், மதுரைக் கணக்கா யனர் மகளுர் நக்கீரர் என்றும், ஊரும், தொழிலும் அறிந்து, இயற்பெயர் அறியப்பெருதொழியின் உறையூர் இளம்பொன் வணிகளுர், வெண்ணிக்குயத்தியார் என்றும், புலவர் பிறந்த ஊர்மட்டும் அறியப்பெறின், கல்லாடனர், கழாத்தலையார் என்றும், அறிந்த வரலாறுகளே அப்புலவர் பெயரோடு இணைத்து வழங்கித் தமிழுலகம் அறிய வகை செய்தனர். அவ்வளவோடு கில்லாமல், ஊரோ, பெயரோ, உற்ற தொழிலோ அறியமாட்டாப் புலவர்களையும், அவர் தம் பாக்களைப் பயின்று, அப் பாக்களில் அவர் ஆண்ட அழகிய உவமைகள் அரிய சொற்ருெடர்களால், ஒரேருழ வன், செம்புலப் பெயல் நீரார் எனவும், கங்குல் வெள்ளத் தார், பதடி வைகலார் எனவும் பெயரிட்டு அறிமுகமாக்கி யுள்ளனர். இவ்வாறு அறிந்த புலவர்களின் சிறுவரலாறு களையும், தமிழுலகம் மறந்துவிடாது போற்றிக்காத்தல் வேண்டும் என்னும் பேருள்ளம் கொண்டு, கபிலர் முதலாக பேயனர் ஈருக உள்ள, சங்கப் புலவர் வரிசை நால்கள் பதி குறிலும், அப்புலவர்கள் நானூற்று அறுபத்தெண்மர் வா லாறு, அவர் பாக்களின் துணை கொண்டே ஒரளவு விரித் துரைக்கப்பட்டுளது.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகையாகிய அப்பழம் பெரும் நால்களைப் பாடித் தந்தவர் அப்புலவர்கள் நானூற் றறுபத்தெண்மரே யெனினும், அவர்கள் அப் பாக்களைப் பாடப் பெருந்துணை புரிந்தவர், அக்கால அரசர்களேயாவர். கிாம்பிய வாழ்க்கையும், கிறைந்த உள்ளமும் சிலவும் நாட் டிலேயே, நல்ல இலக்கியங்கள் தோன் றக்கூடும். அந்நாட் டில் வாழ்பவரே, பொருள் வளத்தைப் போற்ற வேண்டிய கவலையற்றவராய்ப் பேரிலக்கியம் போலும் பொன்ருக் கலை வளத்தைப் போற்றி அளிப்பர். வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்,”என அப்புலவருள் ஒருவரேகூறுவதும் காண்க. அத்தகைய கல்லாட்சி, தமிழ் நாட்டிலும் நிலவச்