பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 157

லும், அத்திசைச் சோறே,’ என்றுரைத்துத் திரும்புவா ராயினர்.

இவ்வாறு நாடுவாழ நல்லறிவூட்டியும், கம் நேரிய வாழ்வால் நன்னெறி காட்டியும் வாழ்ந்தனர் புலவர் நானூற்று அறுபத்தெண்மர். தமிழகம், பண்டு தான்் பெற்றிருந்த செல்வச் சிறப்பை இழந்துவிட்ட இக்காலத் திலும், தமிழரும், தமிழகமும் உலக அரங்கில் உயர்நிலை பெற்றுத்திகழ்வதற்குக் காரணமாய் விளங்குவன, தமிழ் மொழி பெற்றிருக்கும் தனிச் சிறப்புடைய இலக்கியச் செல்வங்களேயாம். ஆகவே, அவ் விலக்கியச் செல்வங்களை ஆக்கி அளித்து, அதன் வழியாகத் தமிழர்க்குத் தாழ்வி ல்ாச் சிறப்பளித்த அப் புலவர் பெருமக்கட்குத் தமிழ் நாட்டார் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள னர். ஆனல், பெறுதற்கரிய பேரிலக்கியப் பெருஞ் செல் வங்களைப் படைத்தளித்த அப் புலவர்களின் வரலாற்றினே அறியும் வாய்ப்பினைத் தமிழகம் இழந்துவிட்டது. புலவர் கள், இலக்கிய வளர்ச்சியிலேயே கருத்துடையாய் கின்று விட்டனரே ஒழிய, தங்கள் வரலாற்றைத் தங்கள் வாயி லாகவே அளிக்கத் தவறி விட்டனர். இதனல், அப் புலவர்க ளுடைய வரலாற்றினே அறிய இயலாமற் போனதோடு, அவர்களிற் பலருடைய இயற்பெயர்தாமும் அறிய இயலா மற் போய்விட்டது. தமக்கு உலக அரங்கில் உயர் இடம் தேடித்தந்த புலவர் பெருமக்கட்குத் தமிழ்மக்கள் அளித்த கைம்மாறுதான்் என்னே !

இவ்வாறு புலவர்களின் வரலாற்றினே அறிய மறந்த நன்றிகெட்ட தமிழரிடையே, நன்றி மறவாத் தமிழர்களும் சிலர் இருந்துள்ளனர். அவர்கள், அப்புலவர்களின் வர லாற்றினே அறியப் பெரிதும் முயன்று, முடியாமற்போகவே, அவர்கள் பெயரையாவது அறிந்து அறிவிக்க முயன்றுள் ளனர். அம் முயற்சியில், ஒரளவு வெற்றியும் பெற்றனர். புலவர் ஒருவருடைய ஊரும், அவர் மேற்கொண்டிருந்த தொழிலும், அவர் இயற்பெயரும் அறியப்பெறின், உறை யூர் மருத்துவன் காமோ கானுர், மதுரைக் கூலவாணிகன்