பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பொத்தியார்

கோப்பெருஞ் சோழனின் உயிரொத்த தோழர்களுள் பொத்தியாரும் ஒருவர் ; உறையூர்க்கண் இருந்து ஆட்சி புரிந்த சோழவேந்தருள் கோப்பெருஞ்சோழன், அறிவு நலமும், ஆட்சி நலமும் ஒருங்கே அமையப்பெற்றவன் : பெரும்புலவனுய்க், கண்ணகனர், கருவூர்ப் பெருஞ்சதுக் கத்துப் பூதநாகனர், பிசிராங்தையார், புல்லாற்றார் எயிற் றியனுர், பொத்தியார் போன்ற புலவர் பெருமக்கள் போற்ற வாழ்ந்தவன்; மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்ன மானம் உடையவன்; தன் வயிற்று கித்த மக்கள் தகாவொழுக்கத்தினராய்த் தன் மீதே போர் தொடுத்துப் போந்த பழிச்செயல் நாணி, வடக்கிருந்து உயிர்நீத்த வான் புகழ் உடையவன்; இத்தகையானின் உயிர்நண்பராம் உரிமைபூண்டு, அவன் புகழையும், அவன்கன் ஆருயிர் கண்ட ாாகிய பிசிாாந்தையாரையும், அவரும் அவலும் மேற்கொண் டிருந்த உயிர் ஒன்றிய நட்பின் பெருமையினேயும் போற்றிப் பாராட்டி, அவரோடு வாழ்ந்து அவர் வடக்கிருந்து உயிர் விட்டாராக, அவரை இழந்து தாம் மட்டும் வாழ எண் துை, அவர் இறந்து நடுகல்லான இடத்திற்கு அணித்தே வடக்கிருந்து உயிர்விட்ட உயர்ந்தோராவர். கோப் பெருஞ் சோழனுக்கும், பிசிராங்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின், அதுவே உடலுயிர் நீங்கும் உரிமைத் தாய நட்பினேப் பயக்கும் ” (குறள் : எஅடு : பரிமேல்) என உயர்ந்த நட்பினர்க்கு எடுத்துக்காட்டாக, உயர்ந் தோரான் காட்டப்பெறும் பெருமைவாய்ந்த பிசிராங்தை யாரே, பழியின் நீங்கிய பெருநண்புடைய பொத்தியார் "பொத்தில் நண்பின் பொத்தி’ (புறம் : உகஉ) எனப் போற்றுவாயின், பொத்தியார்தம் புகழினைப் போற்றவும் வேண்டுமோ? . - .

குணங்களால் கிறைந்த குன்றென வாழ்ந்தவன் கோப்பெருஞ்சோழன் ; அத்தகையான் உயிர்நீத்துக்கிடக்

பே.-2 .