பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொத்தியார் 21

'பெருஞ்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த,

பெருங்களிறு இழந்த பைதற் பாகன் அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை வெளில் பாழாகக் கண்டு கலுழ்ச்தாங்குக் கலங்கினேன் அல்லனே யானே பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய a . பேரிசை மூதார் மன்றம் கண்டே.” (புறம்: உஉ0) இவ்வாறு வருங்கி வாழ்ந்தார் சின்னுள் ; அவர் மனைவியாரும், மகனேப் பெற்றெடுத்துவிட்டார் ; உடனே, அரசன் வடக்கிருந்த இடம் நோக்கி விரைந்தார்; ஆண்டு, அவர் வருகையினை எதிர்நோக்கி, அவர்க்கு என ஒர் இடம் ஒதுக்கியிருக்கக் கண்டார்; அரசன் செயலே அறிந்து பாராட்டினர்; அன்புடையார், உயிரோடு வாழ்ந்தக்கால் உள்ளன எல்லாம் கொடுத்தலேயன்றி, இறந்தபின்னரும் இருகி.கி அளிப்பர் ; உடம்பும், உயிரும், ஒன்றையின்றி ஒன்று அமையாத ஒருமைப்பாடு கொண்டிருத்தலைப் போன்றே, ஒருவரையின்றி யொருவர் வாழமாட்டாப் பெருகட்புடையாரையே உலகம் போற்றும் ; அத்தகைய கட்புடையார் செத்தும் கொடுக்கும் சிறப்புடையராவர் ; அத்தகு சிறப்பு அரசன் கோப்பெருஞ்சோழன்பால் உளது. ஆகவே, இறந்தபின்னரும், தம் மனம்மகிழ இடங் கொடுத்து உதவிஞன் எனப் போற்றினர்.

' கிலேபெறு நடுகல் ஆகியக் கண்ணும்

இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு இன்னுயிர் விரும்பும் கிழமைக் தொன்னட் புடையார் தம்முழைச் செலினே.

- - (Ηρώ : e-ea)

சோழன் பிரிவால், பொத்தியார் உளத்தே தோன்றிய உணர்ச்சிகள் உருவெடுத்த அவர் பாட்டின் வழியே, புலவர் நட்பின் பெருமையுணர்ந்த நல்லவர்; அவரைப் போற்றுவோமாக - - - - - -

  • o