பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. பொன்மணியார்

பொன்னும், மணியும் பெருகக் கொண்டுள்ளமையால், இவர் இப்பெயர் பெற்ருர் போலும் ; இவரைப் பெண்பாற் புலவருள் வரிசைசெய்வர் சிலர்; அவ்வாறு கொள்வதற்காம் சான்று எதுவும் இல்லை. இவர், மழை மாறிய கோடையின் கொடுமையினையும், மழைவளங் காக்கவரும் மாரிக்கால மாண்பினேயும் நன்கு பாடியுள்ளார்.

மழைவளமற்ற மேட்டு நிலத்தே, மானினங்கள் வெம்மையின் கொடுமை ஆற்ருது மயங்கி வீழ்ந்து கிடக்கும்; உழுதொழில் புரியும் எருதுகள், தம் தொழிலை வெறுத்துச் சோம்பிக் கிடக்கும் எனக் கோடையின் கொடுமையும், மழை பெய்யக்கண்டு, மயில் முதலாம் உயிர்கள் எல்லாம் உவகை மிக்கு ஆடிப்பாடும் எனக் கார்காலக் கவினும் கூறப்பட்டுள்ளன ; மயில் முகலாம் உயிர்கட்கு உவகைதரும் அம் மாரிக்காலமே, கணவரைப் பிரிந்து தனித்து வாழும் மகளிர்க்கு மனத்துயர் உண் டாக்கும் இயல்பினையும் உணர்த்தியுள்ளார் புலவர்.

"உவரி, ஒருத்தல் உழாது மடியப்,

புகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில் கடிதுஇடி உருமின் பாம்பு பைஅவிய இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே : வீழ்ந்த மாமழை தழிஇப் பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலைப் பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை தாகீர் நனந்தலே புலம்பக் - கூஉம் தோழி! பெரும் பேதையவே.” (குறுங் : டக்க)