பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பொன்னுகனுர்

பொன்கைனர் எனும் இயற்பெயருடையவர் இவர்; இவர் பாடிய பர்ட்டொன்று குறுக்தொகைக்கண் இடம் பெற்றுளது; இவர் வரலாறு குறித்து அறியத்தக்கன இத்த னேயே ஐய! நெய்தல் சிலத்து மணற்பாப்பில் என் பாவையை வளர்த்தி விட்டு, நீ இருக்கும் இடத்தேடி வந்தன. ளேன் ; இரவு வந்துற்றது; ஆகவே, ஆால்மீன் அருந்தி நிறைந்த வயிறுடையவாய் ஆண்டுவரும் நாரைகள், என் பாவையின் நெற்றியை மிதித்துப்பாழாக்குதலும் கூடும்; ஆகவே, யாங்கள் விரைந்து வீடு செல்லுதல் வேண்டும் ” எனத்தலைவனே நோக்கிக் கூறிய தோழி கூற்றில், என்பாவை எனவும், வந்தேன் எனவும் ஒருமையாற் கூறியவள், யாங் கள் செல்லுதல் வேண்டும் எனப்பின்னர்ப் பன்மையாற் கூறினமையால், தோழியொடு தலைவியும் ஆண்டுவந்துளாள் என்பதைக் குறிப்பான் உணர்வித்தாள் எனப்பாடிய புலமை நலம் பாராட்டற்குரியதாம்.

'நெய்தற் பரப்பில் பாவை கிடப்பி

சின்குறி வந்தனென் இயல் தேர்க் கொண்க! செல்கம்; செலவியங் கொண்மோ அல்கலும், ஆால் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என் மகள் நுதலே.”

(குறுக் ககச}