பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. போத்தனுர்

பல்லவ அரசர்கள் போத்தரையர் எனவும் வழங்கப் பெறுவர்; ஆதலின் போத்து என்பது பல்லவரைக் குறிக்க வழங்கும் சொல்லாதல் அறிக. இதல்ை, போத்தனர் என்ற பெயருடைய இவர், பல்லவர்த் தொடர்புடையவராவர் எனக் கோடலும் பொருந்தும்.

அருள், பொருள் ஆகிய இரண்டனுள், அருளே, சிறப் புடையதாம் ஆதலினலும், மக்கள்பால் இருக்கவேண்டிய மாண்புடையதாம் ஆதலாலும், அருளொடும், அன்பொ ம்ெ வாராப் பொருளாக்கம் புல்லார் புரளவிடல்” என்பதற் கேற்ப, அருள் அழியவரும் பொருள், பொருளாகாது ஆதலாலும், பொருளினும், அருளையே அறிவுடையோர் விரும்புவர்; அவ்வாறின்றி, அருளே மறந்து, பொருளை விரும்புதல் உண்மை அறிவாகாது. இந்த உண்மையைப் புலவர் போத்தனர் தம்முடைய பாட்டில் வைத்து விளக்கி யுள்ளார். -

'அருளன் முக, ஆள்வினை ஆடவர்

பொருள் என வலித்த பொருளல் காட்சி.”

(அகம்: எடு)

இளமை கழிந்தால், அது மீண்டு வருதல் இல்லை; அதை மீட்டுக் கொணர்வார் எவரும் இலர்; இளமை கழிந் தால் கழிந்து விட்டதே என்று கலங்குவதல்லது அதை மீளப் பெறுதல் இயலாது என்பதைப் பிரிந்து சென்ற தலைவர், சென்றுபடு விறற்கவின் உள்ளி, என்றும் இாங்கு நர் அல்லது, பெயர் தந்து யாவரும் தருகரும் உளரோ இவ் வுலகத்தான்ே' (அகம்: எடு) என்று தலைமகள் கூறினுள் எனக் கூறி விளக்கியுள்ளார்.