பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. போதனுர்

வரலாறு விளங்காப் புலவர்களுள் இவரும் ஒருவர். போதனர் என்பது, தாய்தந்தையர் இட்ட இயற் பெயரா, அல்லது பிற்காலத்தார் இவர் சிறப்பறிந்து இட்டு வழங்கிய காரணப்பெயரா என்பது விளங்கவில்லை; நற்றிணைப் பாக் களைப் பாடிய புலவர்களுள், இவர் பெயரே பூண்டார் மற் றொருவரும் உளர்; மதுரைச் சுள்ளம் போதனர் என்ற பெயரை நோக்குக.

மனத்தக்க மாண்புடைய மகளிராவார், தாம் பிறர் தகத்துப் பெருவாழ்வு வேண்டாராய், தாம் புகுந் தகத்துப் பொருள் நிலைக்கேற்ப வாழ்வுவேண்டும் பெருந்திருவின . ராவர்; அத்தகையார் அருகிய இக்காலம் போன்றதன்று பழந்தமிழ்க்காலம்; மனேமாட்சி கிறைந்த மகளிரே மல்கிய காலம் அக்காலம்; அம்மாண்பு நிறை மகளொருக்கியின், மனே வாழ்க்கைக் காட்சியை, அவள் தாய்வழியே காட்டி யுள்ளார் புலவர்.

மணவீடு புக்க தன் மகள், ஆண்டு நடாத்தும் இல் லறச் சிறப்பினைக்காணச் சென்ருள் தாய் ஒருத்தி; அத் தலைவன் இல்லமோ, வறுமைநிறைந்த வாழ்வுடையது; ஆனல், தன் மகளோ, கங்தை இல்லத்தே உள்ள வளம் மிக்க செல்வத்தையும் கினேக்கிருள் இல்லை; முப்பொழுதும் உண்ணுதற்கேற்ற வாய்ப்பு இன்மையால், பொழுதுமாறி உண்ணுகின்றனர்; அந்நிலையிலும், அவன் கூற்றிற்கு மறுத் துரை கூருமல், அவன் குறிப்பறிந்து நடக்கின்ருள் மகள்; இவற்றையெல்லாம் கண்டாள் தாய்; பண்டை நிகழ்ச்சி யொன்று அவள் மனக்கண் முன் தோன்றி நின்றது:

அன்பே உருவாய் அமைந்த செவிலி, ஒருகையில் தேன் கலந்த இனிய சுவைமிக்க பாற் சோறு நிறைந்த ஒளி விடும் பொற்கலத்தையும், மற்றொருகையில், மெல்லிய கோலொன்றையும் ஏங்கி வருகின்ருள்; முத்துப் பாலிட்ட சிலம்பணிந்த தலைவி, அச்சிலம்பொலிக்க ஒடி விளையாடு கின்ருள்; அவளே நெருங்கிய செவிலி, சோற்றை உண்ணு