பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 பேயனர்

வற்றுள் இவர் செய்யுட்களாக வந்துள்ளன முப்பத்தொன் பது செய்யுட்கள்; இதில் மூன்று மட்டுமே மருதத்திணை தழுவி வந்துள்ளன : ஏனேய முப்பத்தாறு பாடல்கள் பிற ఇజ7 தழுவி வந்துள்ள பாடல்களாம். இவ்வாறு, தாம் பாடிய பாக்களுள் பாதிக்கும் குறைவான பாடல்களே மருதத்திணை சார்ந்து வந்ததாகவும், அதனல், இவர்க்குப் பெயர் வழங்கினர் எனல் பொருந்தாது. ஆதலாலும், மருதத்திணே பாடிய சிறப்புக் குறித்து வழங்கப்பெறும் மருதம் பாடிய என்ற சிறப்பு, மருதம் பாடிய இளங் கடுங்கோ என்ற சேர அரசர் வழிவந்த புலவர் ஒருவர்க்குக் கொடுக்கப்பட்டுளது ; அவர் பாடிய செய்யுட்கள் அனைத் தும் மருதம் தழுவியே சிற்பதால், அச் சிறப்பு அவர்க்கே பொருத்த முடைத்தாம் ஆதலாலும், மருதன் இளநாகனர் பெயர்க்கு முன்வரும் மருதன் என்ற சிறப்பு, இவர் மருதத்திணை பாடினர் என்பது குறித்து வந்ததன்று ; புலவர்கள் தந்தை பெயரை, அப் புலவர்தம் பெயர்முன் இணைத்தும் வழங்கும் வழக்கத்திற்கு ஏற்ப வந்த, இளநாக ரிைன் தந்தை பெயரைக் குறிக்கவந்ததே எனக் கொள்க.

மதுரை மருதன் இளநாகனுர், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்ற இரு பாண்டிவேந்தர்களையும், நாஞ்சில் வள்ளுவன், பிட்டங் கொற்றன், சிறுகுடிவாணன் ஆகிய குறுகிலத் தலைவர்களையும், கழுவுள் என்பானையும், கொங் கர், கோசர், மழவர், வேளிர் ஆய வீரமரபினரையும், மதுரை, திருப்பாங்குன்றம், கிருச்செந்தார் ஆகிய பாண்டி நாட்டுப் பேரூர்களையும், ஊனுணர், சாய்க்கானம், செல்லூர், நியமம் போன்ற கோசர்க்குரிய ஊர்களையும், வேளிர்க் குரிய வீரை கரையும் தம்முடைய பாக்களில் ஆங்காங்கே எடுத்துக் கூறிப் பாாாட்டியுள்ளார். -

மதுரை மருதன் இளநாகனர், கற்றறிந்தார் போற் மறும் கலித்தொகையில், மருதத்திணை தழுவிய பாடல்கள் முப்பத்தைந்தையும், நற்றிணையில் பன்னிரண்டு பாடல் களையும், குறுந்தொகைக்கண். நான்கு செய்யுட்களையும்,