பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. மருதன் இளநாகனுர்

இவர் பெயர், மதுரை மருதன் இளசாகளுள் எனவும், மருதன் இளநாகனர் எனவும் ஏடுகளில் காணப்படும். மதுாைப் பூதன் இளநாகஞர் என்ற பெயருடையார் ஒருவ ரும், மதுரைப் பெரு மருதன் இளநாகனர் என்ற பெய. ருடையார் ஒருவரும் உள ராதலின், இவர் மதுரை மருதன் இளநாகனர் என அழைக்கப்பெற்ருர். இவர் இயற்பெயர் இளநாகனர் என்பது ; இவர் பெயர்க்கு முன்வரும் மருதன் என்ற சிறப்பு, இவர் தந்தையார் பெயரைக் குறிக்க வந்ததாம். அது, இவர் மருதத்தினை பாடிய சிறப்புக் குறித்து வழங்கப்பட்டதாம் என்று சிலர் கூறு' கின்றனர். அது, இவர் மருதம் பாடிய சிறப்பால் வந்த தாயின், மதுரைப் பெரு மருகன், மதுரைப் பெருமருதன் இளநாகனர் ஆகியோரும், முறையே பெருமருதன், மருதன் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளமையால், அச் சிறப்பு, அவர்க்கும் அவர் மருதம் பாடிய சிறப்பால் வந்தது எனக் கூறல்வேண்டும் ; ஆகுல், அவ்வாறு கூறப்படுவதில்லை ஆதலாலும், அஃது, இவர்க்கு மருதம் பாடிய சிறப்பால் வித்ததாகவே கொள்வதாயின், இவர் பெயர், பாலை பாடிய சிறப்புடைய பெருங் கடுங்கோ, பாலைபாடிய பெருங் கடுங்கோ எனவும், வெறிபாடிய சிறப்புடைய காமக் கண் னியார், வெறிபாடிய காமக்கண்ணியார் எனவும் அழைக் கப் பெறுதலேபோல், மருதம் பாடிய இளநாகனர் என அழைக்கப்பெறுதல் வேண்டும்; அவ்வாறு அழைக்கப் பெறவில்லே ஆதலாலும், பாலே பாடிய பெருங் கடுங்கோ பாடிய அகத்துறைப் பாக்கள் அறுபத்தேழும், பாலைத் திணையையே தழுவி வந்துள்ளன; ஆதலின், அவர்க்குப் பாலை பாடிய என்ற சிறப்பு ஏற்புடையதாகும். மருதன் இளநாகனர் பாடிய அகத்தறைச் செய்யுட்கள் எழுபத்து நான்கு எனின், அவற்றுள் முப்பத்தாறு செய்யுட்கள் மருதம் அல்லாத பிற கினேகளைத் தழுவிவந்த செய்யுட் களாம். ஈற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய