பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 33.

படையால் உண்டாதல் இல்லை : கின் காட்டு மக்கள், அல்லற் பட்டு ஆற்ருது அழ.அழ ஆளும் கொடுங்கோலனுயின், அவர் அழுது சிந்திய கண்ணிர், கின் படைச்செல்வத்தைப் பாழாக்கும் பெரும் படையாய் மாறும். ஆதலின், சின் ஆட்சியின் அழிவின்மை, அவர் கண்ணிர் காணுவண்ணம் ஆளும் கல்லாட்சியால் ஆம் ” என்று அவன் கால்வகைப் ப்டையின் சிறுமையினேயும், கல்லாட்சியின் பெருமை வினேயும் எடுத்துக் கூறினர். நல்லாட்சியின் பெருமை கூறிய அவர், அங்கல்லாட்சியாவது யாது என்பதையும் விளக்குதல் வேண்டும் என விரும்பினர். இவர் கம்மவர் ; ஆகவே, அவர் அறனல்லன செய்யினும் விடுக; இவர் நம் பகைவர்; ஆகவே, அவர் பிழையிலராயினும் ஒலுக்க எனக் கொள்வது செங்கோலன்று ; கொடுங்கோல்; ఆ వీణా அரசர்பால் இருத்தலாகாது ; இவ்வாறு கோல் கொண்டு குடிபுரக்கும் கொற்றவன்பால் ஆண்மையும், அருளும், கொடையும் குன் ருது கின்று கிலேபெறுதல் வேண்டும் ; ஆண்மை, எதையும் எரித்து அழிக்கவல்ல ஞாயிற்றின்பால் உளது போன்ற போாண்மை இருத்தல்வேண்டும் ; அருள், தன் கண்ணுெளியால் உலகத்து உயிர்கட்கு இன்பமூட்டும் திங்கள்பால் உளதுபோன்ற கண்ணருள் விலைபெறுதல் வேண்டும்; கொடை, இங்குப் பெய்யலாம், இங்குப் பெய்தல் கூடாது என்ற வேற்றுமை எண்ணமின்றி, எங்கும் ஒரு படித்தாகப் பெய்யும் இயல்பினதான் வானமே போல், இவர்க்குக் கொடுக்கலாம் ; இவர்க்குக் கொடுத்தலாகாது என்ற வரையறையின்றி வழங்கும் கொடைக்குணம் குன்ருமல் கிற்றல் வேண்டும். ஒர் அரசன், இத்தகைய பண்புடையணுயின், அவன் காட்டில் பொருள் இன்மை கூறி இாந்து வாழ்வார் இலராவர்” என்ற நல்லாட்சியின் பண்பினை எடுத்தோதி, அத்தகைய ஆட்சியுடையய்ை ஆண்டுபல வாழ்ந்து ஆண்டு உயர்வாயாக! என்று வாழ்த்தி வழி காட்டினர்: -

கறைமிடற் றண்ணல், காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாற! 3سورGL