பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பேயனர்

கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும், கெடுங்கொடிய சிமிர்தேரும்,நெஞ்சுடையபுகன் மறவரும்என நான்குடன் மாண்டதாயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் ; அதனல், சமர் எனக்கோல் கோடாது, பிறர் எனக் குணங் கொல்லாது, ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்மையும், திங்களன்ன தண்பெரும் சாயலும், வானத்தன்ன வண்மையும் மூன்றும் உடையை யாகி, இல்லோர் கையற நீ நீடுவாழிய! நெடுந்தகை!” (புறம் : டுடு)

அன்று, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னே, வழங்கிய இவ் அரசியல் அறிவுரை, இன்று உலகிடை வாழும் உயர்ந்த அரசியல் தலைவர்கள்தம் உள்ளத்தைத் தொடும் நாள் எந்த நாளோ ? அவர்க்கு அறிவுரை கூறவல்ல மருதன் இளநாகனுரை இம்மண்ணுலகம் என்று கானுமோ? - - - -

மதுரை மருதன் இளநாகனுர் காலத்தே, பாண்டி காட்டின் மற்ருேர் பகுதியைக் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்பான் ஆண்டிருந்தான்்; அவனை எதிர்த்தார் எவரும் வாழ்ந்தவரல்லர் ; அவன் இத்தமிழகம் எல்லோர்க்கும் பொது என்ற சொல் கேட்கப்பொரு மண்ணுசை மிக்கவன்; ஆசையோடு, அவ்வாசையைக் குறைவற நிறைவேற்றிக்கொள்ள ற்கு வேண்டும் ஆற்றலும் உடையவன்; அவன் ஒருகால் வடநாடு நோக்கிப் படை யெடுத்துச்செல்ல எண்ணுகின்ருன் என அறிந்தார் மதுரை மருதன் இளநாகனர்; அவன் செல்லும் காட்டின் நிலநீர் வளங்களையும், ஆண்டுவாழ் மக்கள் மனநலத்தையும் அறிந்தவர் இளநாகனர். அக்காடு நெய்தல் வளமும், மருத மாண்பும் ஒருசேரப்பெற்றது : மீன் சுடுகின்ற புகை சுடுவதால் உண்டாய மணத்தினையும் உடன்கொண்டு எழுந்து பரந்து, வயலிடங்களேச் சூழஉள்ள மருதமாக்கிளை களில் படிந்துகிடக்கும் காட்சியினே அந்நாட்டில் உள்ள ஊர்