பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 53

விடின், அவர் வளர்க்க வளர்ந்தார் வளமார் பண்புற்று வாழ்வர்: தம் வயிற்றுதித்த சிறுவர்களே அத்தகையார் பால் ஒப்படைப்பதிலும், அவரைப் பேணிவளர்க்கும் அப் பணியைத் தாமே மேற் கொள்ளின், அம் மக்கள் மாண் பினராதலில் சிறிதும் ஐயம் இாதன்ருே தமிழகத்தே, தம் மக்களே அறிவூட்டி வளர்க்கும் அப்பணியினைத் தாய் மாரே மேற் கொண்டனர் என்பதைப் புலவர் ஒரு செய்யு விடத்தே கூறியுள்ளார். ஒரு தாய், அறிவன அறிந்த அறிவுடையளாய்த் திகழ்ந்தாள்; தவறு செய்வான் தன் கணவனுயினும், அதை எடுத்துக் காட்டித் திருத்தத் தயங் காள். அவள் கணவன், அவளேயும், அவள் மகனேயும் பிரிந்து பாத்தை வீடு சென்று பழியுடையயிைன்ை; அவ் வாறு வாழ்ந்த அவன் பின்னர்த் தவறு உணர்ந்து தன் வீடு வந்து சேர்ந்தான்்; அவன் வந்ததை அறிந்தாள் அவள்; அவன் பால் காணலாம் நற்பண்பு கண்டு பாராட்டும் தான்், அவன் பரத்தையர் ஒழுக்கத்தினேப் பழிப்பதை அவன் உணர உணர்த்த விரும்பினுள்; உடனே, அவள் அவனேக் காணுள் போன்று, தன் மகனே அருகழைத்து அவனுக்கு அறிவுரை கூறுவாள் போல், தன் கணவனுக்கு அறிவுரை கூறினுள், மகனே அனைத்துக் கொண்டவாறே, "என் அருமை மகனே! நீ சின் தந்தையின் வடிவும், வனப்புமே, கின் வடிவும், வனப்புமாய்க் கொண்டு விளங்கு கின்றன எனினும், கின்தந்தை பால் காணலாம் பண்புகளில் எவற் .றைக் கொள்ளலாம்? எவற்றைக் கொள்ளலாகாது என் பதை யான் கூற அறிந்து மேற்கொள்வாயாக! தன்னெடு பகைத்த பகைவரைப் பாய்ந்து வென்று களங்கொள்ளும் ஆற்றல் அவர் பால் உண்டு; அதை நீ பெற்றுக்கொள்; இவர் நம்மவர்; ஆகவே பிழைபுரியினும் விடுக; இவர் பகைவர்; ஆகவே பழியிலாாயினும் ஒறுக்க என எண்ணும் இயல்பின்றி எவர்க்கும் ஒருபடித்தா அறக்கூறும் செம் மைப் பண்பு கின் தந்தை பர்ல் உண்டு; அதையும் நீ பெற் அறுக் கொள்; தம் பால் பொருள் வேண்டி வந்து இாந்தார்க்கு வரையாது வழங்கும் வள்ளன்மை அவர் பால் உண்டு;

அதையும் நீ பெற்றுக்கொள்; ஆனல் தம்மோடு ஒருமனப்