பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - பேயனர்

வொருவர் உள்ளத்தையும், ஒவ்வொரு செய்யுளான் உணர்வோமாக.

  • தோன்றின் புகழொடு தோன்றுக ; அஃதிலார் தோன்றலின் தோன்ருமை என்று’ என்று கூறுவர் பெரியோர் ; இதனுல், உயிரினும் புகழே சிறந்ததாதல் அவர் கருத்தாம். அப்புகழ் ஈதலால் உண்டாம் ; ஈதலும், இசைபட வாழ்தலும் பொருள் உடையார்க்கன்றி இயலாது; ஆகவே, உயிரினும் சிறந்தது பொருளாம். அப்பொருள் அரிதின் முயல்வார்க்கே ஆகும் ; ஆகவே அப்பொருள் தேடிப்போதல் அறிவுடைமையாம். ஒரு தலைவன் இவ் வறிவுடையணுயினன்; பொருள்தேடிப் போக எண்ணினன்; ஆனால், அவன் மனே விபால் அவன் கொண்டுள்ள அன்பு அவனைப் பிரியவிடாமல் தடுத்து நிறுத்தலாயிற்று; அவன் பிரியின் அவள் வாழாள்; அவள் இன்றி அவன் வாழான்;. ஆக ஒருவழியில் அவன் உயிரினும் அவள் சிறக்காளா யினுள்; இங்கிலேயில் அவளைத் தேற்ருது பிரிந்து சென்று பொருள் கொணர்த்தும் பயனின்ருய் முடியும்; ஆகவே, அவள், தான்் போதல் அறிவுடைமையாம் என உணர்ந்து, அவ்வுணர்வு வாப்பெற்றமையால், பிரிவைத் தாங்கும் ஆற்ற அடையளாயினள் என அறிந்து செல்வதே அறிவுடைமை யாம் என எண்ணினன். இவ்வாறு காதல், கடமை ஆகிய இரண்டையும் கைவிடாது கின்றே உயர்ந்த வாழ்வு வாழ எண்ணும் அவ் ஆண் மகன் உள்ளத்தை உணர்ந்து உயர் வடைவோமாக! -

'உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்

நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என மனவலித்து ஒழியும் மதுகையளாதல் நீ நன்கறிந்தனை யாயின் நீங்கி

சென்மோ கெஞ்சம்!” (அகம்: உசடு} சிறுவர்களைப் பேணி வளர்ப்பவர் பெண்டிர்; அவர்க்கே அப்பண்பு உண்டு; இளைஞர்க்கு இன்சொல் கலந்த அறி வுரை வழங்கிவளர்க்கும் பெண்டிர்பால் தாயன்பும் கலந்து