பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 51

ஒரு பொய்கைக்கண் மலர்ந்திருந்த தாமாைமலர் ஒன்றில் தும்பி ஒன்று தன் பெடையோடு தேனுண்டு வாழ்ந்திருந்தது; ஒருநாள் அப் பொய்கையின் கரை, கிடும் என உடைத்துக்கொள்ளவே, அவ்வுடைப்பின் வழியே வெள்ளம் உட்புகுந்துவிட்டது ; தாமரை மலர்கள் நீருள் ஆழ்ந்துவிட்டன : தான்் வாழ்ந்த மலர் ருேட் புகுந்து விட்டமையால், இனி அதில் வாழ்தல் இயலாது என அறிந்த அத்தும்பி, அக்குளத்தைவிட்டு நீங்கிக் காவல் கிறைந்த கரையமைந்த பிறிதொரு பொய்கைதேடி உழன்றது ; பின்னர்ப் பண்டைப் பொய்கைக்குரியார், உடைந்த அவ்வுடைப்பினே அடைத் துப் புகுந்த புதுப் புனலப் போக்கிவிடவே, காமரை மலர்கள் பண்டே போல் தலைதுாக்கி கிற்கலாயின; அஃதறிந்த அத்தும்பி, மீண்டுவந்து தன் மலருட் புகுந்து மகிழ்ந்து உறங்கிற்று.

இவ்விரு காட்சிகளேயும் கண்ட நம் புலவர், இவ்விரண் டையும் உவமையும் பொருளுமாக்கிக் கூறி அறிவிக்கும் திறம் அறிந்து அகம் மகிழ்வோமாக :

பன்மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை இன்மலர் இமிர்யூதும் துணைபுணர் இருந்தும்பி, உண்துறை உடைந்தபூப் புனல் சாய்ப்பப், புலந்து ஊடிப் பண்புடை நன்னட்டுப் பகைதலே வந்தென, அதுகை விட்டகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடைழேல் பதிபடர்ந்து இறைகொள்ளும் குடிபோலப் பிறிதுமொரு பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினன் மொய்தப இறைபகை தணிப்பு அக்குடி.பதிப் பெயர்ந்தாங்கு நிறைபுனல் நீங்க வந்து அத்தும்பி அம்மலர்ப் பறைதவிர் பசைவிடுஉம் பாய்புனல் கல்லூர்.”

- - (மருதக் கலி : கங்) மதுரை மருதன் இளநாகனர் பாடிய அகத்துறைப் பாடல்கள் ஒவ்வொன்றும், அக்கால மக்கள்தம் உயரிய உள்ளத்தை உலகறிய உணர்த்தும் இயல்பினவாம் ; அவை யனைத்தையும் ஈண்டு எடுத்துரைப்பது இயலாது. ஆதலின், அவற்றுள், தலைவன், தலைவி, தோழி ஆக இவர்கள் ஒவ்: