பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - பேயகுச்

புலனதலேயும் (மரு. கலி : உஎ), உலகத்து உயிர்க்கு உற்ற துயர் நோக்கிப் பெய்யும் மழைக்குக் குழந்தையின் முகம் நோக்கிப் பால்சுரக்கும் தாயையும், (மரு. கலி கூச) ஒர் ஊரிற் பிறந்தாள் ஒருத்தி, அவள் தங்தை, அவளே விரும்பிய வேந்தர்க்கு அளிக்க மறுப்பதால், அவரால் அவ்வூர் அழிகலின், அவ்வூர் அழிவிற்கு அவளே காரண மாதலே விளக்க, விறகில் தோன்றிய தீ, அவ்விறகையே அழிப்பதையும், (புற டசசு) தன் கணவன் விரைந்து வாமையால் உற்ற துன்பத்தால் அவள் தோள் மெலிதற்கு, மழையால் கரையும் உப்புக் குவியலையும் (அகம் : உoசு), தலைவிக்கு உண்டாம் துயரைத் தலைவன் முன்னின்று போக்குவதற்குக், கண்ணில் விழும் துண்ணிய துகளைத் தடுத்துக் காக்கும் கைகளின் செயலையும் (தற் : உகசு), காட்டில் அல்லன. கடிந்து, நல்லன ஒம்பும் கல்லறி வடையணுய தலைவன், தலைவிக்குற்ற துயர் அறியானதற்கு, மிகச் சேய்மைக்கண் உள்ள பொருள்களையும் காணவல்ல கண்கள், தம்பால் உள்ள வடுவைப் பிறர் உணர்த்தவும் உணரமாட்டாமையினையும் (மரு. கலி : கூச) உவமை காட்டியுள்ளார்; அவர் காட்டிய பிறவுமைகளையும் ஈண்டு எடுத்துக்காட்டின் ஏடு விரியும் எனினும், ஒன்றை மட்டும் உாைத்து மேற் செல்கின்றேன்.

அமைதி கிலவிய ஒரு நாட்டில், மக்கள் மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர் ; ஒருநாள் பகைவர் படையொன்று அங் காட்டுட் புகுந்து பாழ்செய்யத் தொடங்கிவிட்டது ; அதினுல், ஆண்டு வாழ்தல் இனி இயலாது என அறிந்த அங்காட்டுக் குடிகள், அக்காட்டை விட்டகன்று, ஈல்லாட்சி விலவும் பிறிதொரு நாட்டைத்தேடி உழல்வாாயினர் ; அவர் ஆண்டு வாழினும், அவர் உள்ளமெல்லாம் தாம் பிறந்து வாழ்ந்த தம் நாட்டை மறவாது எண்ணியிருந்தது; சின்னட்களுக்குள், அழிக்க நாட்டிற்குரிய அரசன், தன் படைத்துணையால் பகைவரை அழித்துப் போக்கினன் ; நாட்டில் பண்டைகிலே நிலவிற்று; அஃதறிந்த அக்குடிகள், மீண்டும் தம் நாடு புகுந்து மகிழ்ந்து உறைவாராயினர்.