பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 49.

மறைப்புண்டதாக, அதைக் காணப்பெருத பெடை அன்னம், அதை அப்பொய்கையெல்லாம் தேடிவருங்கால், வானத்துமதி ருேட் தோன்றியதாக, அதுவே தன் சேவலாம் எனக்கொண்டு, அதன்பால் விரைந்து போங் கால், எதிரே தன் சேவல் வாக்கண்டு, தன் அறியாமைக்கு நாணிப் பூக்களிடையே புகுந்து மறைந்துகொள்ளும் எனவும், மணமக்கள், மணப்பந்தலில் அந்தணர் ஒம்பிய செந்தீயை வலம்வருதலேபோல், சேவலும் பெடையுமாகிய அன்னங்கள், பொய்கையில் மலர்ந்து கிடக்கும் செங் தாமரை மலர்களேச் சூழவரும் எனவும் புலவர் காட்டும் அன்னப்புள் வாழும் குளக் காட்சிகள் கண்முன் தோன்றிக் கவினளித்தல் காண்க.

' மணிகிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடும் அன்னம், தன்

அணிமிகு சேவலை, அகலடை மறைத்தெனக், கதுமெனக் காணுது, கலங்கி, அம்மடப் பெடை மதிநீழல் நீருட்கண்டு, அதுவென உவந்தோடித், துன்னத் தன்எதிர்வரூஉம் துணைகண்டு மிக நாணிப் பன்மலர் இடைப்பு கூஉம்.” " தாதுசூழ் தாமரைத் தனிமலர்ப் புறஞ்சேர்பு,

காதல்கொள் வதுவைகாள் கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மான்நோக்கின் மடங்தை தன் துணையாக ஒதுடை அந்தணன் எரிவலம் செய்வான்போல் ஆய்தாவி அன்னம்தன் அணிநடைப் பெடையொடு மேதகத் திரிதரும்.” (மருதக்கவி : டு, ச) மதுரை மருதன் இளநாகனர், அழகிய உவமைகளை ஆங்காங்கே எடுத்தாளும் சிறம், எழுத்தறிந்தார் அனைவ. ராலும் அறிந்து போற்றத்தக்க அழகு வாய்ந்தனவாம். எருமைமீது ஏறிச்செல்லும் சிருர்க்குக் கற்பாறைமீது அமர்ந்திருக்கும் குரங்கையும் (அகம் : உoசு), மகனைக் கண்ட தந்தை, அம்மகனுழை மகிழ்ந்து விரைதற்குக், கட்டிய கன்றை நோக்கி விரைந்தோடும் பசுவின்செயலையும், (மரு. கலி : கசு) நனவே கனவாம் என்பதை விளக்க, உள்ளம் உருவாக்கும் பண்ணே, பறையில் ஒலித்துப்

பே.-4