பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங். மாயெண்டனுர்

மாயெண்டனர் பாடிய பாட்டொன்று குறுங் தொகைக்கண் வந்துளது என்பதல்லது, இவர் வாலாருக உரைப்பதற்கு வேறு எதுவும் தெரிந்திலது. பொருள் வயிற் பிரிந்து சென்ற தலைவன், மீண்டு வருங்கால், வாடையே தெல்லிக்காயைத் தின்ற மாையினம் மகிழ்க் தாடும் முன்றிலையும், புல்வேய்ந்த குடிசைகளையும் உடைய நம் தலைவியின் ஊர், தொங்கும் பாம்பின் தோல்உரி போன்ற, தூய வெள்ளிய அருவிகள் விளங்கும் மலையின் உயரத்தே உளது ; ஆண்டுள்ள தலைவியை வருத்தாது. காப்பாயாக,” என வாடையை நோக்கிக் கூறுவான்போல், தலைவி, வாடையால் வருந்தவள் ; ஆகவே அவள் வருத் தம் ஒழியும் வகை, ஆண்டு விரைந்து சோல்வேண்டும் ; அவளுறையும் இடம் இது ; ஆகவே, பாக, ஆண்டு கின்

தாைவிரைந்துசெலுத்துவாயாக எனப்,பாகலுக்கு உரைத் தான்் தலைமகன் என்ற துறையமைய வந்துளது அவர் பாடிய அக் குறுந்தொகைப் பாட்டு. இப் பாட்டில், மலைக்காட்சியும், மலைநாட்டு ஊர்க்காட்சியும், அங்காட்டு வாழ் உயிர்கள் இயல்பும், தலைவியின் அன்பும், அவளே விரைந்து அடைய விரும்பும் தலைவன், தன் விருப்பத் தினேப் பாங்கற்கு உணர்த்தும் பண்பட்ட முறையும் ஒரு சோக் காட்டப்பட்டுள்ளன.

"ஒம்புமதி வாழியோ வாடை பாம்பின்

தாங்கு தோல் கடுக்கும் துவெள் அருவிக் கல்லுயர் எண்ணி யதுவே ; நெல்லி மரையினம் ஆடும் முன்றில் புல்வேய் குரம்பை நல்லோள் ஊாே.” (குறுங் : உங்-டு)