பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கழிகாட்டு கல்லூர் நத்தத்தனர் 27

புகழச்செய்தது ; கல்லியக்கோடன், தாய், தந்தை, தம்முன், ஆசிரியன் போன்ற ஆண்டால் முதிர்ந்தோர்க்குக் கூப்பிய கையினே உடையான் என, அவன்பால் அமைந்த பெரி யோரைப் பணியும் பண்புடைமையினையும், வீரர்களுக்கு அல்லாமல் மகளிர் அணய மலர்ந்த மார்புடையான் என அவன் காதற் சிறப்பினையும், உழவர் தம் உழுதொழிலினே ஒரு குறையும் இன்றி நன்கு ஆற்றுமாறு ஆளும் அரசுடை யான் என அவன் செங்கோற் சிறப்பினையும், தேரேறி வந்து போர்புரிவார் தம்மை அழித்தொழிக்கும் ஆற்றல்' வாய்ந்த வேலுடையான் என அவன் பகைவர்க்கஞ்சாப் பேராண்மையினேயும் எடுத்துக்கூறிப் பாராட்டிப் போற்று' வாராயினர். -

'முதுவோர்க்கு முகிழ்த்த கையினே எனவும், இளையோர்க்கு மலர்ந்த மார்பினே எனவும், ஏரோர்க்கு கிழன்ற கோலின எனவும் ; தேரோர்க்கு அழன்ற வேலினே எனவும்.' -

(சிறுபாண் : உங்க-): அரசர்க்குப் பொருள்வரும் வழிகளுள், பகைவரை அழித்துப் பெறுவதும் ஒன்றாம் என்று அரசியல் நூல்கள் உரைககும். -

'உறுபொருளும், உல்கு பொருளும்தன் ஒன்னர்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்." -

(திருக்குறள் : எடுசு). நல்லியக்கோடன் தன்னை நாடிவரும் பாணர் முதலா யினர்க்கு அளிக்கப் பெரும்பொருள் வேண்டியக்கால், அவன் படைவீரர் பகைவர் காட்டின் மீது படையெடுத்துச் சென்று வென்று, ஆண்டுக் கைப்பற்றிய பொருளில் ஆண்டு அவ்வெற்றி பாடிவந்தார்க்கு அளித்தன போகக் கொண்டு விந்த எஞ்சிய பொருளே எடுத்து வழங்குவன் என அவன் ப்ொருள்பெறு வழியினேயும், அதனே அவன் செலவிடும் கில்ல்ாற்றின் திறத்தினையும் நன்கு விளக்கியுள்ளார் புலவ்ர். ல்ேலூர்ாத்தத்தனர்.