பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கடியலூர் உருத்திரங் கண்ணனுர்,

உருத்திரங் கண்ணணுருக்குரிய கடியலூர் யாண்டுளது: என்பது தெளிவாகத் தெரிந்திலது க்டியலூர் பாண்டி, காட்டு ஊர்களுள் ஒன்று ; அது திருநெல்வேலி மாவட். உத்தில் உளது என்பர் சிலர் ; சிலர், இவராற் பாடப் பெற்ருேர் இருவரும் சோனுட்டினும், அதற்கு வடக்கின் கண்ணதாய தொண்டை நாட்டினும் அரசோச்சியவராத லின், உருத்திரங் கண்ணனுர் சோணுட்டைச் சேர்ந்தோ ராவர் எனக் கூறுவர். அவர் எந்நாட்டினராயினும், சோணுட்டின் இயல்புகளைச் சிறக்க அறிந்தவர் என்பது அவர் பாடல்களால் புலம்ை. உருத்திரங் கண்ணர்ை. உருத்திரன் என்பாரின் மகனராவர். இவர் அந்தணர் . இது, 'ஊரும், பெயரும்" என்ற தொல்காப்பியம் மரபியற். சூத்திரத்திற்கு உரை கண்ட பேராசிரியர், கடியலூர் உருத்திரங் கண்ணன் என்பன அந்தணர்க்கு உரியன," எனக் கூறுவதால் தெளிவாம். இருகிலம் கடந்த திருமறு: மார்பின் முந்நீர் வண்ணன்,” எனத் திருமாலேயும், காங் தளம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் பாம்பணேப் பள்ளி அமர்ந்தோ னங்கண்,” என அவன் பாம்பனேக் கோலம் கிடக்கும் திருவெஃகாவையும், கின்ற வுருவின் நெடி யோன் கொப்பூழ், நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டு," எனத் திருமாலின் திருவுந்திக் கமலத்தையும் பாராட்டி யிருத்தலின், இவர் திருமாலே வழிபடும் வைதிக சமயத்தினராவர் எனக் கோடல் பொருந்தும். பத்துப் பாட்டினுள், பெரும் பாணுற்றுப் படை, பட்டினப்பாலை ஆய இரு பாட்டுக்களைப் பாடிய பெருமை நம் உருத்திரங் கண்ணனருக்கு உரித்து. இவ் விருபெரும் பாக்களே அல்லாமல், நெடுந்தொகை, குறுங் தொகை ஆகிய இரு நூல்களிலும் ஒவ்வொரு செய்யுள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன. பட்டினப்பால யினேப் பாடக் கேட்ட பெருந்திருமாவளவன், இவர் பெருமை யறிந்து, பதிறுை நூருயிரம் பொற்காசு பரி