பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உ. கடம்பனுார்ச் சாண்டிலியனுர்


கடம்பனூர் என்பது ஒர் ஊர் ; இது யாண்டுளது என்பது விளங்கவில்லை. கடம்பன் என்பது முருகனுக் குரிய பெயர்களுள் ஒன்று ஆதலின் இவ்வூர் அவன் பெயரால் ஆகிய ஊர்களுள் ஒன்றுபோலும் என எண்ணுதற்கும் இடம் உண்டு. சாண்டிலியன் என்பது ஒரு முனிவரின் பெயர் ; தெய்வங்களின் பெயரை மக்களுக்கு இடுவதே போல், முனிவர்களின் பெயர்களேயும் மக்களுக்கு இட்டு வழங்கினர் அக்காலத்தார்.

வானத்தே வளைந்த மெல்லிய கோடுபோல் தோன்றும் மூன்றாம் பிறைக்கு உடைந்த வளையலை உவமைகூறிப் பாடிய புலமை போற்றற்குரியதாமன்றோ? பிறை, இறைவன் சென்னியை இருப்பிடமாக்கொண்டமையால், பிறையினக் கண்டார், அப்பெருமானேக் கண்டதேபோல் கருதிக் கைகூப்பித் தொழுதல் தமிழகத்து வழக்கமாம்; அப்பிறையை மக்களேயன்றி முனிவரும், தேவரும் தொழுவர் என நூல்கள் கூறுகின்றன ; இவ்வாறு பிறை பலரானும் தொழப்படும் என்பதை நம் புலவரும் அறிவித் அதுள்ளார். இதனால் அவர் தெய்வக் கொள்கை தெளிவாதல் காண்க.


"வளை உடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி . . . . . . இன்னம் பிறந்தன்று பிறையே."

(குறுக்: உ0எ)