பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. தாமல் பல்கண்ணனுர்

தாமல், காஞ்சிபுரத்திற்கு மேற்கே, காஞ்சிபுரம், வேலூர்ப் பெருவழியில் உளது. விஜயாலயன் வழிவந்த சோழர் காலத்தே இவ்வூர் மிக்க சிறப்புற்றிருந்தது. பாழான பழைய கோயில்களும் இங்கே உண்டு ; அக் கோயிற் கல்வெட்டுக்களில் இவ்வூர்ப் பெயர் தாமர் எனக் காணப்படுகிறது. பன்கண்ணன் என்பது இந்திரனுக்கு உரிய பெயர்களுள் ஒன்று இவர் பார்ப்பனர்;

ஒருகால் சோழன் கலங்கிள்ளியின் தம்பி மாவளத் தான்் என்பவனும் புலவர் தாமல் பல்கண்ணனரும் வட் டாடி மகிழ்ந்திருந்தனர்; அப்பொழுது வட்டுக்களில் ஒன்று புலவரை அறியாமலே, அவர்கீழ் மறைந்துவிட்டது ; அதைக்கண்ட மாவளத்தான்், புலவர் வேண்டுமென்றே வட்டினே ஒளித்தனர் எனக்கொண்டு வெகுண்டு, அவரை அவ்வட்டினலேயே எறிந்தான்் தவறு செய்திலராகவும், தவறு செய்தார்போல் எண்ணி எறிந்த அவன் செயல் புலவர்க்கு மிக்க சினத்தை உண்டாக்கிற்று ; கலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனேக், குலத்தின்கண் ஐயப் படும்,' என்ப. ஒருவன் பழிசெயலும், இழிகுணமும் உடையயிைன், ஊரார், அவன் பிறப்பின்கண் யாதோ பிழையுண்டு என்றே கருதுவர்; புலவர்க்கு, மாவளத்தான்் உண்மையில் சோழர் குடியிம் பிறந்தவன்தான் என்ற ஐயம் உண்டாயிற்று : அக்குடிவந்தர்ர், பார்ப்பார் மனம் நோகுமாறு நடந்துகொள்ளும் பண்பினரல்லரே; பருந் தால் தாக்குற்றுத் தன்பால் வந்தடைந்த சிறிய புருவினப் பேணிக் காத்தற்காகத் தான்ே துலேயில் புகுந்து, தன் உடலேயே உதவிய உயர்ந்தோர் பிறந்த பெருமையுடைய தன்ருே சோழர் பெருங்குடி, பெருமைசால் அப்பெருங் குடியில், இவன்போலும் இழிகுணமுடையார் தோன்றி. யிருத்தல் இயலாதே; மேலும் பகைவரைக் கடக்கும் பேராண்மையும், புலவரைப் புரக்கும் கைவண்மையும்,

tor.L.-III–2