உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாநகர்ப் புலவர்கள்

யானே பிழைத்தனென் ; சிறக்கநின் ஆயுள் ! மிக்குவரும் இன்னிர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே !' (புறம் : சங்)

இந்தச் செய்யுளில், புருவின்பொருட்டுத் துலேபுகுந்த சிபியின் செயலைச் சிறப்பிக்க விரும்பிய புலவர், அவன் செயல், உலக உயிர்கள், ஞாயிற்றின் கொடிய வெம்மை யால் வெந்து வருந்தாவண்ணம், அஞ் ஞாயிற்று வெப்பத் தினேத் தாம் தாங்கிக்கொண்டு, காற்றையே உணவாக உடைய சில முனிவர்கள், அஞ் ஞாயிருேடே உலகைச் சுற்றி வருகின்றனர் . அத்தகைய பேருபகாரியாகிய அம் முனிவராலும் வியந்து போற்றப்படும் அருமை உடையது அவன் செயல் எனக்கூறி, ஒரு வரலாற்றினேயும் விரித்து உரைத்துள்ளார் :

'நிலமிசை வாழ்கர் அலமால் இரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருள.' (புறம் : சங்.)