பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வணிகரிற் புலவர்கள்

  • பகைவர் தேயம் பாழாகுமாறு அழிக்கும், புகைவர் அணுகற்கு அஞ்சும் ஆற்றலையும், வெற்றிதரும் வேலினேயும் உடைய சோன் ’ எனச் சோரையும்,

' ஒன்னர் தேஎம் பாழ்பட எறும் துன்னரும் துப்பின் வென்வேல் பொறையன்' (அகம் : கூக-அ) * பகைவர் இறந்து விண்ணுலகடையுமாறு உருவிப்பிடித்த வாளினையும், பகைவர் நாட்டினுட் புகுந்து, கன்று ஈன்ற பசுக்களைக் கவர்ந்து கொணரும் வெட்சி வீரர்களையும் உடைய, போர் பல வெல்லும் சோழன் ” எனச் சோழரை யும் ஒரு பாட்டில் வைத்துப் பாராட்டியுள்ளார். பொரு அர், விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள் புனிற்று ஆன் காவின் இளையர் பெருமகன், - தொகு போர்ச் சோழன்.” (அகம்: உக.அ). மூவேந்தர் பெருமையினே முறையே பாராட்டிய - கணக்காயனர், அவ்வேந்தர் படைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் வீரன் ஒருவனின் கொற்றமும், கொடையும் 姆 * தோன்றப் பாராட்டியுள்ளார் ; படைத்தலைவன் ஒருவன் சிற்றார் ஒன்றில் வாழ்கின் முன்; அவன் வாழும் ஊர் வளத்தால் குறைவுற்றது; அவ்வூர் அரசனுக்கு முறையாகத் தரவேண்டிய வரியினைக் கொடுக்கும் வன்மையும் இல்லாதது ; ஆளுல் அவனே, வழிவழியாக வந்த வள்ளன்மைக் குணம் உடையவன் ; ஆதலின் அவன் தன்பால் வருவார்க்கு வாரி வாரி வழங் கும் இயல்பினனுயினன்; அவன் அவ்வாறு வழங்கிய காலத்தும், அவன் செல்வம், கொளக்கொளக் குறையாக் கடலேபோல் குறையாத விளங்குவதாயிற்று; இதனுல் அவன், கொடுப்பார்க்குக் கடலேப் போன்றவனுயினன். கொடைத் தொழிலில்தான் அவன் கடலை யொத்துளான் என்பது அல்ல ; போர்க்களத்திலும் கடலுக்கு ஆழி போன்றவகை விளங்குவன்; களத்தில் முன்கின்ற படை