பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ. கணியன் பூங்குன்றன் கணியன் பூங்குன்றன் என்ற இப்பெயர் இவர்க்குத் தொழிலாலும், ஊராலும் வந்ததாம்; கணியன் என்பான், சோதிடம் சொல்வோனவன் ; இவர் அத்தொழில் மேற் கொண்டிருந்தமையால் இப்பெயர் பெற்ருர்; இவர், இராம நாதபுர மாவட்டத்திலுள்ள மகிபாலன் பட்டியென இப் போது வழங்கும் ஊரினராவர் ; மகிபாலன் பட்டிக்கு அருகிலுள்ள கோயிற் கல்வெட்டுக்கள், அவ்வூரைப் பூங் குன்ற நாட்டுப் பூங்குன்றம் எனக்குறிக்கின்றன. புனல் செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாடு” எனவும் புனல் ஒழுகப் புள்ளிரியும் பூங்குன்றநாடு” எனவும், இந்நாடு புலவர்களால் போற்றப்பட்டுளது ; சில ஏடுகளில் இவர் பெயர், கணிபுன் குன்றன் எனப் பிழைப்பட்டு வந்துளது. இவர் பாட்டாக கம்க்குக் கிடைத்தன. இரண்டே எனினும், அவ்விரண்டும், மக்கள் வாழ்க்கையை மாண்புடையதாக்கு தற்காம் உயரிய கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு விளங்குகின்றன. மலைகளையும், மரங்களையும் அடித்து உருட்டிக் கொண்டோடிவரும் காட்டாற்று வெள்ளத்தில் மிதந்து செல்லும் ஒருபொருள், அவ்யாற்று நீர் ஒடிய வழியெல் லாம் ஒடுவதல்லது, கனக்கென ஒரு வழியினே மேற் கொள்ளமாட்டாமையே.போல், 'ஊழிற்பெருவலியாவுள? மற்ருென்று சூழினும் தான் முந்துறும்” என்பவாகலின், உயிரும், ஊழின் வழியே சென்று ஆகூழ் உற்றவழி வாழ் வுற்றும், போகூழ் உற்றவழித் தாழ்வுற்றும் வாழ்தலல்லது, தானே முயன்று பெறும் வாழ்வில்தாம்; இவ்வுண்மை யின, ஆன்ருேர் உரைத்துச் சென்ற அறநூல்கள்ாலும், உலகின் அன்ருட கிகழ்ச்சிகளாலும் அறிந்த பெரியோரே, “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே ; அல்கா நல் குரவு அவாவெனப்படுமே” என்பவாதலின், மக்களின் எங் கிலைக்கும், அவர் மனமே காரணமாம் எனவுணர்ந்து மனதை அடக்கியாளும் மாண்புடையாாவர். அத்தகையார்,